

பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 31-ம் தேதி ஜப்பானுக்கு 4 நாள் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
இரு நாடுகளுக்கிடையே அணு சக்தி ஒப்பந்தம், பாதுகாப்பு, ராணுவம், வர்த்தகம் உள்ளிட்டவற்றில் ஒத்துழைப்பையும், உறவையும் மேலும் வலுப்படுத்தும் வகையில் மோடி பேச்சு நடத்த இருக்கிறார். மோடியின் பயணத்தின்போது இது தொடர்பாக மேலும் பல ஒப்பந்தங்கள் ஜப்பானுடன் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜப்பான் மன்னர் அகிஹிட்டோ, பிரதமர் சின்ஷோ அபே உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பலரையும் மோடி சந்தித்துப் பேச இருக்கிறார்.