காஷ்மீர் துப்பாக்கிச் சண்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: ஒரு ராணுவ வீரர் உயிரிழப்பு

காஷ்மீர் துப்பாக்கிச் சண்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: ஒரு ராணுவ வீரர் உயிரிழப்பு
Updated on
1 min read

காஷ்மீர் மாநிலத்தில் இன்று காலை நடைபெற்ற தேடுதல் வேட்டையில்  4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த வீரர் ஒருவரும் உயிரிழந்தார்.

குல்காம் மாவட்டத்தின் ரெட்வானி பகுதியில் நேற்று இரவு (திங்கள்கிழமை) நடைபெற்ற தேடுதல் வேட்டையில், இந்திய ராணுவத்தின் 1ஆர்ஆர் படைப்பிரிவும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை மற்றும் சிறப்பு அதிரடிப் படையினரும் மூன்று தீவிரவாதிகளை முதலில் சுற்றி வளைத்ததாக ஆரம்பகட்ட செய்திகள் தெரிவித்தன.

இதுகுறித்து மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், ''நேற்று இரவு நடந்த தேடுதல் வேட்டையில் மூன்று தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். எனினும் இம்மூன்று உடல்களும் இன்னும் மீட்டெடுக்கப்படவில்லை. இன்னும் தேடுதல் வேட்டைப் பணி தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

இச்சண்டையின்போது ஒருவர் மாற்றி ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டதில் ஒரு ராணுவ வீரர் உயிரிழந்தார். துப்பாக்கிச் சண்டை நடைபெற்ற இடத்தில் திடீரென குண்டு வெடித்ததில் மத்திய ரிசர்வ் படையைச் சேர்ந்தக காவலர் இருவர் காயமடைந்தனர்'' என்றார்.

இன்று அதிகாலை புல்வாமா மாவட்டத்தில் ரேஸிபோரா பகுதியில் உள்ள ட்ரால் மலையில் நடைபெற்ற இன்னொரு ஆப்ரேஷனில் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். 

கொல்லப்பட்ட இத்தீவிரவாதி ஜாகீர் மூசா தலைமையில் இயங்கிவரும் அன்சார் உல் காஸ்வாச்சல் ஹிந்த் எனும் தீவிரவாதக் குழுவைச் சேரந்தவர் என்று அடையாளங் காணப்பட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in