கர்நாடகாவில் கால்வாயில் பஸ் கவிழ்ந்து கோர விபத்து: குழந்தைகள் உட்பட 30 பேர் உயிரிழப்பு - குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல்

கர்நாடகாவில் கால்வாயில் பஸ் கவிழ்ந்து கோர விபத்து: குழந்தைகள் உட்பட 30 பேர் உயிரிழப்பு - குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல்
Updated on
2 min read

கர்நாடக மாநிலம் மண்டியாவில் தனியார் பேருந்து கால்வாயில் கவிழ்ந்து 8 குழந்தைகள் உட்பட 30 பேர் உயிரிழந்தனர்.

கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தில் உள்ள பாண்டவ புராவில் இருந்து மண்டியா நகரம் நோக்கி நேற்று பகல் 12 மணியளவில் தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. கனகனமாரடி அருகே சென்று கொண்டிருந்தபோது பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் சாலையோரத்தில் உள்ள காவிரி ஆற்றின் விஸ்வேரய்யா கால்வாயில் பேருந்து கவிழ்ந்தது. ஆழமான பெரிய கால்வாயில் நீர் நிரம்பி ஓடியதால், பேருந்து உடனடியாக மூழ்கியது.

இதனைக் கண்ட கனகனமாரடி கிராம மக்கள் ஓடி வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். கால்வாயின் இரு பக்கமும் கயிறு கட்டி நீரில் குதித்து, உயிருக்கு போராடியவர்களை மீட்க முயன்றனர். ஆனால் பேருந் தின் கதவு கால்வாயின் அடிப் பகுதியில் சிக்கியதால், உடனடி யாக மீட்க முடியவில்லை. இதனால் ஜன்னலை உடைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதற்கு தாமதமான தால், பேருந்தில் சிக்கிய பயணிகள் பரிதாபமாக பலியாகினர்.

தகவல் அறிந்து, சம்பவ இடத் துக்கு வந்த மீட்பு படையினர் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டனர். உயிரிழந்த‌ குழந்தைகள், பெரியவர்கள், பெண்களின் உடல் களை கரையில் வரிசையாக கிடத்தி வைத்தனர். இதனை பார்த்து பயணிகளின் உறவினர்களும், கிராம மக்களும் கதறி அழுததால் அப்பகுதியே சோகத்தில் மூழ்கியது. கால்வாயில் மூழ்கியிருந்த பேருந் தையும் கரைக்கு இழுத்தனர்.

இதுகுறித்து மண்டியா மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பலராம கவுடா கூறியதாவது:

ஓட்டுநரின் அலட்சியத்தாலேயே விபத்து ஏற்பட்டிருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. விபத்தில் உயிர்தப்பிய ஓட்டுநர் மஞ்சுநாத், பேருந்தின் உரிமையாளர் ஸ்ரீனிவாஸ் உள்ளிட்டோர் மீது பாண்டவபுரா போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பேருந்தில் எத்தனை பேர் பயணித்தார்கள் என்பது சரியாக‌ தெரியவில்லை. இதுவரை 8 குழந்தைகள் உடபட 30 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. உடல் களை அடையாளம் காணும் பணி கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் 7-ம் வகுப்பு மாணவர் ரோகித் உயிர் தப்பி இருக்கிறார். பேருந்து கால்வாயில் விழுந்தவுடன் ஜன்னல் வழியாக வெளியே வந்திருக்கிறார். அவர் அதிர்ச்சியில் இருப்பதால் மண்டியா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்திருக்கிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முதல்வர் ஆய்வு

முதல்வர் குமாரசாமி, துணை முதல்வர் பரமேஷ்வர் ஆகியோர் பெங்களூருவில் நேற்று தாம் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு சம்பவ இடத் துக்கு விரைந்தனர். உயிரிழந் தோரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர். அப்போது குமாரசாமியை சூழ்ந்து பெண்கள் கதறி அழுதனர். இதனால் அவரும் கண் கலங்கினார்.

விபத்து குறித்து ஆய்வு செய்த குமாரசாமி, விரை வில் அறிக்கை அளிக்கும்படி மாவட்ட ஆட்சியருக்கு உத்தர விட்டார். குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், பிரதமர் நரேந் திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் ட்விட் டர் மூலமாக விபத்தில் உயிரிழந் தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in