

ராஜஸ்தானில் டிசம்பர் 7-ம் தேதி நடைபெறும் தேர்தலையொட்டி, ஜெய்சால்மர் மாவட்டம் பொக் ரான் தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் நேற்று பிரச் சாரம் செய்தார். இங்கு அவர் பேசும்போது, “ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 10 நாட்களில் விவசாயிகளிடன் கடன் தள்ளுபடி செய்யப்படும்.
பஞ்சாப் மற்றும் கர்நாடகாவில் நடந்த தேர்தலில் இதே வாக்குறுதியை நான் அளித்தேன். அங்குள்ள காங்கிரஸ் அரசுகள் வேளாண் கடனை தள்ளுபடி செய்துள்ளன. பஞ்சாப் மற்றும் கர்நாடகாவில் விவசாயிகளில் யாரேனும் ஒருவரை அழைத்து இதை நீங்கள் சரிபார்த்துக் கொள்ளலாம். பொய் வாக்குறுதிகளை நான் அளிக்க மாட்டேன்.
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க காங்கிரஸ் முதல்வர் தினமும் 18 மணி நேரம் உழைப்பார் என உறுதி அளிக்கிறேன். கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு நாங்கள் கடன் வழங்குவோம்.
இளைஞர்களுக்கு கடன் கொடுத்து மற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குமாறு கூறுவோம். நாட்டின் மிகப்பெரிய 15 தொழிலதிபர்களின் ரூ.3.5 லட்சம் கோடி கடனை பிரதமர் மோடி தள்ளுபடி செய்துள்ளார்.
பரத்பூரில் அரசுப் பள்ளி ஒன்றில் மின்விசிறிகள், மேசை, நாற்காலிகள், குடிநீர், மைதானம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக விளம்பரம் வந்துள்ளது.
ஆனால் பத்திரிகை யாளர்கள் அங்கு சென்று பார்த்த போது மின்விசிறிகளோ, குடிநீரோ எந்த வசதியும் இல்லை. ஆர்எஸ்எஸ், பாஜகவினர் போலன்றி, காங்கிரஸ் தொண்டர் கள் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும். பிரதமர், முதல் வர் உட்பட எவரையும் தவறாக பேசக் கூடாது. இவ்வாறு ராகுல் காந்தி பேசினார். - பிடிஐ