சத்தீஸ்கரில் 8 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கரில் 8 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை
Updated on
1 min read

சத்தீஸ்கர் மாநிலத்தில் இன்று பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 8 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர்.

சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டத்தில் மாவோயிஸ்டுகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்குமிடையே இன்று (திங்கள் கிழமை) காலை கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.

மாவட்ட ரிசர்வ் போலீஸ் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையும் இணைந்து சுக்மா மாவட்டத்தின் பிரச்சினை மிகுந்த இடங்களில் தேடுதல் வேட்டையை நடத்தின.

வெவ்வேறு திசைகளிலிருந்து மாவோயிஸ்டுகள் இருந்த பகுதிகளைக் கண்டறிந்து பாதுகாப்புப் படையினர் நெருங்கி துப்பாக்கியால் சுட்டனர். அப்போது மாவோயிஸ்ட்டுகளும் பதிலுக்குச் சுட்டதால் கடும் சண்டை நடைபெற்றது.

இதில்,  கொல்லப்பட்ட மாவோயிஸ்டுகளின் சடலங்கள் மக்கள் விடுதலை கொரில்லாப்படை அதிகமாக உள்ள சாக்லெர் வனப்பகுதியிலிருந்து மீட்கப்பட்டன. ஒரு மாவோயிஸ்டு படுகாயமுற்ற நிலையில் கைது செய்யப்பட்டுள்ளர்.

அவரிடமிருந்த ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதில் பார்மர் எனப்படும் கைத்துப்பாக்கிகளும் ஆபத்தான வெடிபொருட்களும் அதிநவீன கையெறி குண்டுகளும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தேடுதல்வேட்டை இன்று மேலும் தொடர்ந்து நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.

சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூர் மாவட்டம் கங்களூர், மட்டெட் வனப் பகுதிகளில் மாவட்ட அதிரடிப் படை போலீஸார் (டிஆர்ஜி), சிறப்பு அதிரடிப் படையினர் ஆகியோர் அடங்கிய குழு நேற்று நடத்திய சோதனைகளில் இருவர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in