

சுரங்கத் தொழில் முறைகேட்டில் ஈடுபட்டதாக வழக்கு தொடரப் பட்ட கர்நாடக முன்னாள் மாநில அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியின் ரூ. 37 கோடியே 88 லட்சம் மதிப்பிலான சொத்துகளை முடக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அசோசியேடட் சுரங்க நிறுவனத்தின் மூலம் பெல்லாரி மாவட்டத்தில் ஹவாம்பாவி என்ற இடத்தில் இரும்பு தாது சுரங்கத்தை ஜனார்த்தன ரெட்டி நிர்வகித்து வந்தார். இதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக ஜனார்த்தன ரெட்டி, அவரின் மனைவி லட்சுமி அருணா ஆகியோர் மீது அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்துள்ளது. தனது சுரங்கத் தொழில் மூலம் சுமார் ரூ. 480 கோடி வரை முறைகேடு செய்து ஜனார்த்தன ரெட்டி சம்பாதித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த வழக்கின் விசாரணை, டெல்லியில் உள்ள பணமோசடி தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. ஜனார்த்தன ரெட்டிக்கு சொந்தமான ரூ. 37 கோடியே 88 லட்சம் மதிப்பிலான சொத்துகளை முடக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.