தேர்தல் ஆணையத்தில் அமித் ஷா மீது புகார்

தேர்தல் ஆணையத்தில் அமித் ஷா மீது புகார்
Updated on
1 min read

ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கு வரும் டிசம்பர் 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து அங்கு அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், பாஜக தலைவர் அமித் ஷா, நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்ரீசந்த் கிருபளானி மற்றும் பாஜக எம்எல்ஏ ராம்ஹெட் சிங் யாதவ் ஆகியோர் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக ராஜஸ்தான் காங்கிரஸ் சார்பில் தேர்தல் ஆணையத்தில் நேற்று புகார் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுஷில் சர்மா ஜெய்ப்பூரில் நேற்று கூறும்போது, “பாஜக தலைவர் அமித் ஷா சமீபத்தில் பிகானீர் நகரில் பிரச்சாரம் மேற்கொண் டார். அப்போது, எங்கள் கட்சி யின் முக்கிய தலைவர்கள் பற்றி அவதூறாக பேசினார். இது போல, நிம்பஹரா தொகுதியில் போட்டியிடும் பாஜக அமைச்சர் கிருபளானி, பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்கும்போது, தேர் தலில் தனக்கு வாக்களிக்காவிட் டால் தற்கொலை செய்துகொள் வேன் எனக் கூறியுள்ளார்.

மேலும் கிஷன்கார் பஸ் தொகுதியில் போட்டியிடும் ராம்ஹெட் சிங் யாதவ், உச்ச நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் வகையில் பேசி உள்ளார். அரசு உயர் அதிகாரி ராஜேஷ் சவுஹானின் மனைவி சோபா சவுகான் சோஜத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். எனவே, தேர்தல் நடத்தை விதி களை மீறிய இவர்கள் மீது நட வடிக்கை எடுக்கக் கோரி தேர்தல் ஆணையத்தில் புகார் செய்துள் ளோம்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in