Last Updated : 05 Nov, 2018 04:03 PM

 

Published : 05 Nov 2018 04:03 PM
Last Updated : 05 Nov 2018 04:03 PM

பயணிகளின் உடைமைகள் இன்றி சென்ற கோ ஏர் விமானம்: ஜம்முவில் இறங்கிய பயணிகள் அதிர்ச்சி

பயணிகளின் மூட்டை முடிச்சுகளை மறந்துவிட்டுச் சென்ற கோ ஏர் விமானம் நேற்று இரவு காஷ்மீரில் தரையிறங்கியது. அப்போது தங்கள் மூட்டை முடிச்சுகள் எதுவும் உடன் கொண்டு வரப்படவில்லை என்பதை அறிந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

விமானப் பயணிகள் முக்கிய அங்கமாகக் கருதுவது தங்கள் உடைமைகளைத்தான். அதை விட்டுவிட்டு அவர்கள் எங்கும் செல்ல முடியாது. கோ ஏர் விமானத்தில் ஸ்ரீநகரிலிருந்து ஜம்முவுக்குச் சென்று இறங்கிய பயணிகளுக்கு அந்தச் சிக்கல் ஏற்பட்டது.

இதுகுறித்து ஹமீத் என்ற விமானப் பயணி தொலைபேசியிலேயே பிடிஐக்கு தெரிவித்ததாவது:

''ஸ்ரீநகரிலிருந்து ஜம்முவிற்கு கோ ஏர் விமானம் G8-213-ல் வந்தடைந்தோம், ஆனால் விமான ஊழியர்கள் எங்கள் உடைமைகளை ஏற்றவில்லை, ஆரம்பத்தில் பெரும்பாலான பயணிகள் தங்கள் உடைமைகளுக்காகக் காத்திருக்க வேண்டுமா என்று கேட்டனர்.

அதற்கு ஒரு கோ ஏர் பணியாளர் பயணிகளின் உடைமைகள் அனைத்தும் வேறொரு விமானத்தில் சென்றுவிட்டிருக்க வாய்ப்புள்ளது என்றும் அட்டவணைப்படி அது வந்த பிறகுதான் நம் கைக்கு கிடைக்க வாய்ப்புள்ளது என்றார். இதனால் நாங்கள் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக காத்திருந்தோம். ஆனால் மறுநாள் வந்து உடைமைகளைப் பெற்றுக்கொள்ளும்படி அதிகாரிகள் தெரிவித்தனர்''.

இவ்வாறு பயணி ஹமீத் தெரிவித்தார்.

இதுகுறித்து பின்னர் கோ ஏர் விமான செய்தித் தொடர்பாளர் தெரிவிக்கையில், ''விமான சுமை கட்டுப்பாடுகள் காரணமாகவே சில பயணிகளின் உடைமைகள் ஜி8 213 விமானத்தில் ஏற்றப்படவில்லை.

நேற்று ஸ்ரீநகரில் மோசமான வானிலை காரணமாக, காத்திருந்த ஏராளமான பயணிகளைத் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கான முயற்சிகளில் எங்கள் ஏர்லைன் ஈடுபட்டிருந்தது. மற்றபடி ஜம்முவிற்கு மற்றொரு விமானம் மூலம் பாதி பேருக்கு லக்கேஜ் வழங்கப்படுகிறது. மீதமுள்ள பயணிகளுக்கு அவர்கள் குறிப்பிட்ட இடங்களுக்கேச் சென்று வழங்கப்படும். பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்காக உண்மையிலேயே வருந்துகிறோம்'' என்று அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x