Published : 03 Nov 2018 11:51 PM
Last Updated : 03 Nov 2018 11:51 PM

சித்திரை ஆட்டத் திருநாள் பூஜைகளுக்காக நடை நாளை திறப்பு: சபரிமலையில் மீண்டும் ‘144’ அமல்

சித்திரை ஆட்டத் திருநாள் பூஜைகளுக்காக சபரிமலை நடை நாளை திறக்கப்படு கிறது. இதனைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நட வடிக்கையாக சபரிமலையின் 30 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட பகுதிகளுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயி லுக்கு 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் செல்ல தடை இருந்தது. இதற்கு எதி ராக தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த செப் டம்பர் மாதம் 28-ம் தேதி தீர்ப் பளித்தது. இதில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களை யும் அனுமதிக்க உத்தரவிட் டது. இதைக் கண்டித்து பாஜக, இந்து அமைப்புகள், சில பெண்கள் அமைப்புகளும் போராட்டத்தில் குதித்தன.

உச்ச  நீதிமன்ற உத்தர வுக்கு பின்பு, கடந்த மாதம் 17-ம் தேதி ஐப்பசி மாத பூஜை களுக்காக சபரிமலை நடை திறக்கப்பட்டது. கோயிலுக்கு வந்த இளம் வயது பெண்களை போராட்டக்காரர்கள் தடுத்தனர். அன்று இரவே 144 தடை உத்தரவு பிறக்கப்பட்டு, 22-ம் தேதி நடை அடைக்கப்படும் வரை அது அமலில் இருந்தது.

இந்நிலையில் சித்திரை ஆட்டத் திருநாள் பூஜைகளுக் காக சபரிமலை நடை நாளை திறக்கப்படுகிறது. ஐப்பசி மாத பூஜைக்காக நடை திறக்கப் பட்ட போது, போராட்டங்கள் நிகழ்ந்தது போல் இப்போதும் நடக்க வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறையினர் கேரள அரசுக்கு எச்சரிக்கை விடுத்து இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து  நடை  திறப்பதற்கு ஒருநாள் முன் னரே சன்னிதானம், பம்பை, நிலக்கல், இலவங்கல் என முப்பது கிலோ மீட்டர் சுற்றள வுக்கு இன்று அதிகாலை 12.01 முதல் 144 தடை உத்தரவு பிறக் கப்பட்டுள்ளது. நாளை (5-ம் தேதி) நடை திறக்க உள்ள நிலையில், இந்த தடை உத் தரவு 6-ம் தேதி நள்ளிரவு வரை அமலில் இருக்கும் என பத்தனம்திட்டா மாவட்ட ஆட் சியர் நூக் அறிவித்துள் ளார். மேலும் ஊடகவியலாளர் களுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக கேரள டிஜிபி லோக்நாத் பெகரா கூறும்போது, “முக்கிய சீசனான மண்டல மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை நடை வரும் 16-ம் தேதி திறக்கப்பட இருக்கிறது. அதற்கு முன்பாக இந்த சித்திரை ஆட்டத் திரு நாள் பூஜை வருகிறது. சீசன் நேரத்தில் பாதுகாப்புப் பணி யில் இருக்கும் காவலர்களுக்கு இணையாக இப்போது காவலர்கள் பணியமர்த்தப் பட்டுள்ளனர்”என்றார். நடை

நாளை திறக்கப்படும் நிலை யில் மீண்டும் சபரிமலை பகுதி பரபரப்புக்கு உள்ளாகி இருக் கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x