Published : 10 Nov 2018 11:37 AM
Last Updated : 10 Nov 2018 11:37 AM

கர்நாடகாவில் திப்பு ஜெயந்தி: எதிர்ப்பு தெரிவித்து பாஜக போராட்டம்

திப்பு ஜெயந்திக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் பல பகுதிகளில் பாஜக மற்றும் பல்வேறு அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.

கர்நாடகாவில் மன்னர் திப்பு சுல்தான் பிறந்த நாள் விழா திப்பு ஜெயந்தியாக அரசு சார்பில் கொண்டாடப்படுகிறது. இதற்கு பாஜக மற்றும் சில கன்னட அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. சிறுபான்மையினரின் வாக்குகளை பெறுவதற்காகவே காங்கிரஸூம், மதச்சார்பற்ற ஜனதாதளமும் திப்பு ஜெயந்திரை கொண்டாடுவதாக பாஜக புகார் கூறி வருகிறது.

திப்பு ஜெயந்திக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படுகிறது. எனினும் பலத்த பாதுகாப்புடன் திப்பு ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. கடும் சர்ச்சை எழுந்த நிலையில் முதல்வர் குமாரசாமி இந்த விழாவில் பங்கேற்காமல் தவிர்த்து விட்டார்.

திப்பு ஜெயந்தியையொட்டி கர்நாடகாவில் 8 மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குடகு மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மடிகேரியில் போராட்டக்குழுவினர் ஊர்வலமாக புறப்பட்டுச் சென்று திப்பு ஜெயந்திக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதுபோலவே மைசூரு உள்ளிட்ட இடங்களிலும் திப்பு ஜெயந்திக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக மற்றும் பல்வேறு அமைப்புகள் போராட்டங்கள் நடத்தின.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x