Published : 22 Aug 2014 02:15 PM
Last Updated : 22 Aug 2014 02:15 PM

டெல்லி பாலியல் வன்கொடுமை சம்பவம் சிறிய விஷயம்: ஜேட்லி கருத்துக்கு எதிர்ப்பு

டெல்லி பாலியல் வன்கொடுமை சம்பவம் சிறிய விஷயம் என மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய பாதுகாப்பு அமைச்சர் அருண் ஜேட்லி: "டெல்லியில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறிய சம்பவம் உலகளவில் பிரபலப்படுத்தப்பட்டது. அதனால், இந்தியா சுற்றுலாத்துறைக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது என மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது" என கூறினார்.

அவரது இந்த கருத்துக்கு காங்கிரஸ் கட்சி, பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் எம்.பி. ஒருவர் கூறுகையில்: ஒரு அமைச்சர் இதுமாதிரியான கருத்தை தெரிவித்திருப்பது துரதிர்ஷ்டவசமானது. இது, மத்திய அரசின் எண்ணங்களை பிரதிபலிக்கிறது என்றார்.

டெல்லி சம்பவத்தில் பலியான மாணவியின் தந்தை, தாய் கூறுகையில் மத்திய அமைச்சரின் கருத்து தங்களை வெகுவாக காயப்படுத்தியிருப்பதாகவும், அதிருப்தி அளிப்பதாகவும் தெரிவித்தனர். மேலும், ஒரு நேர்மையான பிரஜ்ஜையின் உயிரிழப்பு தேசத்தின் இழப்பு இல்லையா என கேள்வி எழுப்பினர்.

ஜேட்லியின் கருத்துக்கு தேசிய மகளிர் ஆணையமும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஜேட்லி வருத்தம்:

இதற்கிடையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஜேட்லி, தனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக கூறினார்.

ஜேட்லி கூறியதாவது: "நான் எப்போதும் வெளிப்படையாக பேசுவேன். அவ்வாறே, இந்திய சுற்றுலாத்துறை பற்றி வெளிப்படையாக பேசினேன். ஒரு குற்றம் எப்படி இந்திய சுற்றுலா துறையை பாதிக்கிறது. பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல் எப்படி சுற்றுலா துறையை முடக்கிவிடுகிறது என்ற முகாந்தாரத்திலேயே கூறினேன். நான் குற்றங்களை வன்மையாக கண்டித்திருக்கிறேன். அதுவும் பெண்களுக்கு எதிரான வன் கொடுமைகளை எப்போதுமே வன்மையாக கண்டித்திருக்கிறேன். ஆனால், எனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x