தெலங்கானாவில் டிஆர்எஸ் கட்சி பிரமுகர் பண்ணையில் ரூ.15 கோடி பறிமுதல்

தெலங்கானாவில் டிஆர்எஸ் கட்சி பிரமுகர் பண்ணையில் ரூ.15 கோடி பறிமுதல்
Updated on
1 min read

தெலங்கானா மாநிலத்தில் டிசம் பர் 7-ம் தேதி சட்டப்பேரவை தேர் தல் நடக்கவுள்ளது. இந்நிலையில் அங்கு கோட்டங்கல் தொகுதி யில் உள்ள ஜகன்நாத ரெட்டி என் பவருக்கு சொந்தமான பண்ணை வீட்டில் பணம் பதுக்கி வைக்கப் பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி களுக்கு நேற்று மாலை தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து தேர்தல் அதிகாரிகள் வருமான வரித்துறையினருடன் இணைந்து அந்த வீட்டில் சோதனையிட்டனர். இந்த சோதனையில் ரூ.15 கோடிக்கும் அதிகமாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த பண்ணை வீடு, கோட்டங் கல் தொகுதி தெலங்கானா ராஷ் டிர சமிதி (டிஆர்எஸ்) வேட்பாள ரின் தம்பியான ஜகன்நாத ரெட் டிக்கு சொந்தமானது என்ப தால் வாக்காளர்களுக்கு கொடுப் பதற்காக பணம் பதுக்கி வைக்கப் பட்டிருந்ததா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in