Last Updated : 11 Nov, 2018 08:18 AM

 

Published : 11 Nov 2018 08:18 AM
Last Updated : 11 Nov 2018 08:18 AM

முதல்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது; சத்தீஸ்கரில் 18 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு: அமித் ஷா, ராகுல் காந்தி உள்ளிட்டோர் இறுதிகட்ட வாக்கு சேகரிப்பு

சத்தீஸ்கர் மாநில சட்டப் பேரவை தேர்தலுக்கான முதல் கட்ட பிரச்சாரம் நேற்று மாலை யுடன் ஓய்ந்தது. இறுதி நாளான நேற்று பாஜக தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் இறுதிகட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். நாளை வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் உள்ள 90 தொகுதி களுக்கு வரும் 12 மற்றும் 20 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் ஆளும் பாஜகவுக்கும் காங் கிரஸுக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. இங்கு கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சியில் இருக் கும் பாஜகவை வீழ்த்த வேண் டும் என காங்கிரஸும், ஆட் சியை தக்கவைத்துக் கொள் ளும் முனைப்பில் பாஜகவும் தீவிரமாக களப் பணியாற்றி வருகின்றன.

இதுதவிர, மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ், முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி தலைமை யிலான ஜனதா காங்கிரஸ் சத்தீஸ்கர் (ஜெசிசி) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் ஆகி யவை கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

முதல்கட்டமாக, பஸ்தார், பீஜப்பூர், தண்டேவாடா உட்பட நக்சலைட் தீவிரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த 8 மாவட் டங்களுக்குட்பட்ட 18 தொகுதி களில் நாளை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. முதல்வர் ரமண் சிங் (ராஜ்நந்த்கான்) உட்பட 190 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 31 லட்சத் துக்கும் மேற்பட்ட வாக் காளர்கள் வாக்களிக்க உள்ள னர். தேர்தலுக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முதல்கட்ட தேர்தல் நடை பெறவுள்ள தொகுதிகளில் பல்வேறு அரசியல் கட்சி களைச் சேர்ந்த முக்கிய தலை வர்கள் கடந்த சில வாரங் களாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். தேர்தலை புறக் கணிக்குமாறு நக்சலைட்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் கடந்த 15 நாட்களில் 3 இடங்களில் நக்சலைட்கள் நடத்திய தாக்குதலில் தூர் தர்ஷன் கேமராமேன், 2 போலீஸார் உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர்.

ஜக்தால்பூரில் பாஜக சார் பில் நேற்று முன்தினம் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசி னார். பாஜக தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலை வர்கள் நேற்று இறுதிகட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். மாலை 5 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது.

பாஜகவின் தேர்தல் அறிக் கையை தலைநகர் ராய்ப் பூரில் அமித் ஷா நேற்று வெளியிட்டார். அமித் ஷா பாராட்டுபின்னர் செய்தியாளர்களி டம் பேசும்போது, “சத்தீஸ்க ரில் ரமண் சிங் தலைமையிலான பாஜக அரசு நக்சலைட் தீவிர வாதத்தைக் கட்டுப்படுத்தி யுள்ளது. கிட்டத்தட்ட நக்ச லிசம் இல்லாத மாநிலமாக மாற்றியுள்ளது. மின்சாரம் மற்றும் சிமென்ட் உற்பத்தி கேந்திரமாக சத்தீஸ்கர் தற் போது திகழ்கிறது. மாநிலத்தின் வளர்ச்சிக்கு பல்வேறு நலத் திட்டங்களை ரமண்சிங் அரசு செயல்படுத்தியுள்ளது. 100 நாள் வேலை திட்டத்தை ஊழலுக்கு இடமின்றி செயல் படுத்தியுள்ளது. எனவே, இங்கு 4-வது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும் என நம்புகிறேன்” என்றார்.

லார்மி என்ற இடத்தில் உ.பி. முதல்வர் ஆதித்யநாத் பாஜக வுக்கு வாக்கு சேகரித்தார். ஆதித்யநாத் பிரச்சாரம்அப்போது அவர் கூறும் போது, “காங்கிரஸ் கட்சி தேசியப் பாதுகாப்புடன் விளை யாடுகிறது. அரசியல் ஆதா யங்களுக்காக சத்தீஸ் கரிலும் ஜார்க்கண்டிலும் மறை முகமாக நக்சலிசத்தை ஆதரிக் கிறது. சத்தீஸ்கர் தாது, வன வளம் நிறைந்த மாநிலமாக இருந்தாலும் காங்கிரஸ் ஆட்சி யில் மிகவும் பின்தங்கிய மாநில மாக இருந்தது. தற்போது வன வளம் உள்ளூர் மக்களின் நலனுக்காக பயன்படுத்தப்படு கிறது. எனவே, பாஜகவுக்கு தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும்” என்றார்.

ராகுல் குற்றச்சாட்டுகான்கர் மாவட்டம் சரமா கிராமத்தில் நேற்று நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:பிரதமர் மோடி தலைமை யிலான கடந்த 4 ஆண்டு கால பாஜக ஆட்சியில், 15 தொழிலதிபர்கள் அரசு வங்கி களில் பெற்ற ரூ.3.5 லட்சம் கோடி கடன் ரத்து செய்யப்பட் டுள்ளது. கிராமப்புற ஏழைகள் பயன்பெறும் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தை செயல்படுத்த ஆண் டுக்கு ரூ.35 ஆயிரம் கோடி தேவைப்படுகிறது. இந்நிலை யில், இதுபோல 10 மடங்கு கடன் தொகையை ரத்து செய்து கோடீஸ்வரர்களுக்கு உதவியுள்ளார் மோடி.

சத்தீஸ்கர் மாநில முதல் வர் ரமண் சிங் பல்வேறு ஊழல்களுக்கு துணை நிற் கிறார். குறிப்பாக, ரூ.5 ஆயிரம் கோடி சீட்டு நிதி நிறுவன மோசடி தொடர்பாக அவர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் பொது விநியோக திட்டத்தில் நடந்த ரூ.36 ஆயிரம் கோடி ஊழலி லும் முதல்வருக்கு தொடர்பு இருப்பதை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் கிடைத் துள்ளது.

ரமண் சிங் முதல்வரான பிறகு கடந்த 15 ஆண்டுகளில் 40 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பை இழந் துள்ளனர். 56 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் மலைவாழ் மக்களிடமிருந்து பறிக்கப்பட்டு முதல்வரின் நண்பர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

எனவே, காங்கிரஸ் ஆட் சிக்கு வந்தால் இளைஞர் களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்கப் படும். சொந்தமாக நிலம் இல் லாதவர்களுக்கு நிலம் வழங் கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x