

கர்நாடகாவில் மஜத ஆட் சிக்கு வந்தால், கந்து வட்டி பிரச்சினையை தீர்க்கும் வகை யில் ஏழைகளுக்கு வட்டி யில்லா கடன் வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட் டிருந்தது. இதை நிறைவேற்றும் வகையில் 'ஏழைகளின் தோழன்' திட்டத்தை முதல்வர் குமாரசாமி நேற்று பெங்களூருவில் தொடங்கிவைத்தார்.
அப்போது குமாரசாமி பேசும் போது, “இந்த திட்டத்தின்படி கூலித் தொழிலாளிகள், கைம் பெண்கள் உள்ளிட்ட வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்பவர் களுக்கு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும். முதல்கட்டமாக இந்த திட்டத்துக்கு ரூ. 53 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் சாலையோரம் காய்கறி விற்பனை செய்யும் 1000 ஏழைகளுக்கு இத்திட்டத்தின் கீழ் கடன் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 4 ஆயிரம் சாலையோர வியாபாரிகளுக்கும், விரைவில் கடனுதவி வழங்கப்படும்” என்றார்.