கரும்பு விவசாயிகளுக்கு ஆதரவாக‌ கர்நாடகாவில் பாஜக ஆர்ப்பாட்டம்: முதல்வர் குமாரசாமி குற்றச்சாட்டு

கரும்பு விவசாயிகளுக்கு ஆதரவாக‌ கர்நாடகாவில் பாஜக ஆர்ப்பாட்டம்: முதல்வர் குமாரசாமி குற்றச்சாட்டு
Updated on
1 min read

கர்நாடகாவில் கரும்பு விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக பாஜக நேற்று மாநிலம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதற்கு மாநில முதல்வர் குமாரசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் கரும்பு கொள் முதல் விலையை உயர்த்த கோரியும், நிலுவைத் தொகையை வழங்கக் கோரியும் கரும்பு விவசாயிகள் கடந்த 4 தினங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள் ளனர்.

இதனிடையே, பெங்களூருவில் உள்ள தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய விவசாயிகளுடன் முதல் வர் குமாரசாமி நடத்திய பேச்சு வார்த்தை தோல்வி அடைந்தது.

இந்நிலையில், கரும்பு விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாகவும், கர்நாடக அரசின் பாராமுகத்தை கண்டித்தும் கர்நாடக பாஜக சார்பில் நேற்று மாநிலம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. பெங்களூருவில் உள்ள மைசூரு வங்கி சதுக்கத்தில் மாநிலத் தலைவர் எடியூரப்பா தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக எம்பிக்கள் அசோக், பி.சி. மோகன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

அப்போது எடியூரப்பா பேசுகை யில், ''குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் - மஜத கூட்டணி அரசு, கரும்பு விவசாயிகளுக்கு துரோகம் இழைத்து விட்டது. விவசாயிகளை குண்டர்கள் என அழைத்த குமாரசாமியின் பேச்சு கடுமையாக‌ கண்டிக்கத்தக்கது. பெண் விவசாயி யிடம் சர்ச்சைக்குரிய வகையில் கேள்வி எழுப்பிய குமாரசாமி உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். கரும்பு விவசாயிகளின் கோரிக்கைகளை அரசு ஏற்க வேண்டும். இல்லை யெனில், வருகிற குளிர்கால கூட்டத்தொடரின் போது அவையில் கேள்வி எழுப்புவோம்''என்றார்.

இதுதொடர்பாக முதல்வர் குமாரசாமி, ‘‘கரும்பு விவசாயி களின் போராட்டத்தை பாஜக அரசியலாக்குகிறது. எடியூரப்பா முதல்வராக இருந்த போது, விவசாயிகளுக்கு ஒன்றுமே செய்யவில்லை. மத்திய அரசும் விவசாயிகளுக்கு பெரிதாக எந்த திட்டத்தையும் செயல்படுத்த வில்லை. இப்போது எடியூரப்பா ஏமாற்று நாடகம் நடத்தி, விவசாயிகளை அரசுக்கு எதிராக தூண்டி விடுகிறார். பாஜகவுக்கு விவசாயிகள் தக்கப்பாடம் புகட்டுவார்கள்'' என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in