

1987-ம் ஆண்டு அமைச்சரவையின் ஒப்புதல் இல்லாமலேயே ராஜீவ் காந்தி இலங்கைக்கு இந்திய அமைதிப்படையை அனுப்பினார் என்று முன்னாள் அமைச்சர் நட்வர் சிங் கூறியுள்ளார்.
முன்பு காங்கிரஸில் இருந்தவ ரான நட்வர் சிங் தொலைக்காட்சி சேனலுக்கு வியாழக்கிழமை அளித்த பேட்டியில் மேலும் கூறியிருப்பது:
1987-ம் ஆண்டு சரியான காரண மும், தெளிவான நோக்கமும் இல்லாமல் ராஜீவ் காந்தி இலங் கைக்கு இந்திய ராணுவத்தை அனுப்பிவிட்டார். இது தொடர்பாக அமைச்சரவையுடனும், உயரதி காரிகளுடனும் அவர் ஆலோசிக்க வில்லை. இலங்கை தொடர்பான அவரது கொள்கைதான் அவரது முடிவுக்கு காரணமாகிவிட்டது.
தங்கள் குடும்பத்துக்கு 45 ஆண்டுகள் விசுவாசமாக இருந்த வரிடம் இந்தியர்கள் யாரும் கொடூரமாக நடந்து கொள்ள மாட்டார்கள். ஆனால் சோனியா எனக்கு அதனைச் செய்தார். அவரது இன்னொரு முகம் மிகவும் கொடூரமானது என்றார்.
சோனியாவின் இத்தாலிய முகம்தான் கொடூரமானதா என்ற கேள்விக்கு, அவரது கொடூரமான பகுதி இந்தியர்களின் இயல்பு அல்ல. இந்தியர்கள் யாரும் அது போன்ற நடந்து கொள்ளமாட் டார்கள் என்று நட்வர் சிங் பதிலளித்தார்.
இதன் மூலம் சோனியா காந்தி இத்தாலியைச் சேர்ந்தவர் என்பதால் மோசமாக நடந்து கொண்டார் என மறைமுகமாக தெரிவித்துள்ளார்.
மன்மோகன் சிங் அமைச்சர வையில் நட்வர் சிங் வெளியுறவு அமைச்சராக இருந்தார். எண் ணெய்க்கு உணவு திட்டத்தில் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து 2005-ம் ஆண்டு பதவியை இழந்தார். 2008-ல் காங்கிரஸில் இருந்தும் விலகினார்.