

மறைந்த கன்னட நடிகரும் முன்னாள் அமைச்சருமான அம்பரீஷ் (66) உடலுக்கு முன்னாள் பிரதமர் தேவகவுடா, முதல்வர் குமாரசாமி, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
மூத்த கன்னட நடிகரும், முன்னாள் மத்திய, மாநில அமைச்சருமான அம்பரீஷ் (66), கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் தொட்டரசினகெரேவைச் சேர்ந்தவர். கன்னடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் சேர்த்து மொத்தமாக 208 திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகர் ரஜினியின் நெருங்கிய நண்பரான அம்பரீஷ் அவருடன் இணைந்து ‘பிரியா' படத்தில் நடித்தார்.
கன்னட நடிகை சுமலதாவை மணந்த இவர், மனைவி மற்றும் மகன் அபிஷேக்குடன் பெங்களூரு வில் வசித்து வந்தார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அரசில் செய்தி ஒலிபரப்புத் துறை இணை யமைச்சராகவும் கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா அமைச்சரவையில் வீட்டுவசதி துறை அமைச்சராகவும் பதவி வகித்தார்.
சிறுநீரக கோளாறால் அவதிப் பட்ட அம்பரீஷ் சிங்கப்பூருக்கு சென்று சிகிச்சை பெற்று திரும்பி னார். நேற்று முன்தினம் இரவு அவருக்கு திடீரென சுவாசக் கோளாறு ஏற்பட்டது. மனைவி சுமலதா, மகன் அபிஷேக் பெங்க ளூருவில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு அம்பரீஷை அழைத்து சென்றனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. நேற்று முன்தினம் நள்ளிரவு அவர் உயிரிழந்தார். அமைச்சர்கள் டி.கே.சிவகுமார், கே.ஜே.ஜார்ஜ், நடிகர்கள் புனித் ராஜ்குமார், யஷ் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு விரைந்தனர்.
பொதுமக்கள் அஞ்சலிக்காக அம்பரீஷின் உடல் நேற்று கண்டீ ரவா ஸ்டேடியத்தில் வைக்கப் பட்டது. அங்கு முதல்வர் குமாரசாமி, துணை முதல்வர் பரமேஷ்வர், முன்னாள் பிரதமர் தேவகவுடா, முன்னாள் முதல்வர் சித்தராமையா, கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். கன்னட நடிகர்கள் சிவராஜ் குமார், உபேந்திரா, சுதீப், புனித் ராஜ்குமார் உள்ளிட்டோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் இருந்து நேரில் வந்து அம்பரீஷின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். நடிகர்கள் சரத்குமார், பிரகாஷ் ராஜ், நடிகைகள் ராதிகா, சுஹாசினி, தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். அம்பரீஷின் உடல் அவரது சொந்த ஊரான மண்டியாவுக்கு கொண்டுசெல்லப் பட்டது.
முதல்வர் குமாரசாமி கூறுகை யில், “அம்பரீஷின் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும். 3 நாட்கள் கர்நாடகா வில் துக்கம் அனுசரிக்கப்படும். நடிகர் ராஜ்குமாரின் சமாதி அருகே கண்டீரவா ஸ்டுடியோவில் அம்பரீஷ் நினைவகம் அமைக் கப்படும்''என்றார்.
இன்று இறுதிச்சடங்கு
பெங்களூருவில் உள்ள கண்டீரா ஸ்டூடியோவில் இன்று இறுதிச் சடங்குகள் நடைபெறுகிறது