

கடல் மார்க்கமாக எத்தகைய அச்சுறுத்தல் எழுந்தாலும் அதை முறியடிப்போம் என்று கடற்படைத் தளபதி சுனில் லன்பா தெரிவித்துள்ளார்.
கடந்த 2008 நவம்பரில் கடல் வழியாக மும்பைக்குள் ஊடுருவிய 10 பாகிஸ்தான் தீவிரவாதிகள், 166 பேரை கொலை செய்தனர். இந்த சம்பவத்தின் 10-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி கடற்படைத் தளபதி அட்மிரல் சுனில் லன்பா, பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
இந்திய கடலோர பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கடற் படை மட்டுமன்றி கடலோர காவல் படை உட்பட பல்வேறு அமைப்புகள் பல அடுக்கு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன.
கடல் மார்க்கமாக எத்தகைய அச்சுறுத்தல் எழுந்தாலும் அதை முறியடிக்க கடற்படை தயாராக உள்ளது. இந்திய கடல் பகுதியில் செல்லும் கப்பல்கள், மீன்பிடி படகுகள் அனைத்தும் கண்காணிப்பு வளையத்துக்குள் உள்ளன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.