

உத்திரப்பிரதேசத்தில் மதவாத அரசியலில் காங்கிரஸ் கட்சியே ஈடுபட்டு வருவதாக பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி ஒரு நாளிதழுக்கு அளித்த பேட்டியில், "சமாஜ்வாதி கட்சி ஆட்சி செய்து வரும் உத்திரப்பிரதேச மாநிலத்தில் உருவாகும் மதக்கலவரங்கள் அரசியல் ஆதாயத்திற்காக , ஏழை மக்களை பிரித்து சாதுர்யமாக திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றன. மக்கள் தங்கள் உண்மையான எதிரி வறுமை, வேலையின்மை போன்ற பிரச்சினைகள்தான் என்பதை உணரவிடாமல் இத்தகைய மதக்கலவரங்கள் தோற்றுவிக்கப்படுகின்றன” என்று தெரிவித்து இருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள பாஜக மூத்த அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்: "இந்நாட்டில் மதவாத அரசியலில் ஒரு கட்சி ஈடுபடுகிறது என்றால் அது காங்கிரஸ் கட்சிதான். உ.பி.யில் கடந்த 10 ஆண்டுகளாக சமாஜ்வாதி கட்சி ஆட்சியில் இருந்தது. அவர்கள் ஆதரவையே காங்கிரஸ் பெற்று வந்தது. சமாஜ்வாதி ஆட்சியில் அம்மாநிலத்தில் சட்டம் ஒழுங்கி சீர் கெட்டுள்ளது. மதக்கலவரங்களை பற்றி பேசி அவற்றை தூண்டிவிட்டு மதவாத அரசியல் செய்ய வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியின் நோக்கம் என தெரிவித்தார்.
உ.பி. மதக்கலவரங்கள் குறித்து விவாதிக்க அனுமதி கோரி நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் முழுவதும் காங்கிரஸ் கட்சி கடும் அமளியில் ஈடுப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.