ஒதுங்குகிறார் சுஷ்மா ஸ்வராஜ்? -மக்களவை தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என தகவல்

ஒதுங்குகிறார் சுஷ்மா ஸ்வராஜ்? -மக்களவை தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என தகவல்
Updated on
1 min read

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் (வயது 66)அடுத்த மக்களவை தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

பாஜகவின் மிக மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தற்போது வெளியுறவுத்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். மத்திய பிரதேச மாநிலம் விதிஷா தொகுதி எம்.பியாக இருந்து வருகிறார். நீண்ட அனுபவம் கொண்ட அவர், முந்தைய வாஜ்பாய் அரசில் பல முக்கிய துறைகளின் அமைச்சராக விளங்கினார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பதவி இருந்தபோது மக்களவை எதிர்கட்சித் தலைவராக பதவி வகித்தார். 2014 மக்களவை தேர்தலுக்கு முன்பாக பாஜக சார்பில் பிரதமர் பதவிக்கு முன்னிறுத்தப்பட்டவர்களில் இவரும் ஒருவர்.

இந்தநிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அங்கு பிரசாரத்துக்காக சுஷ்மா ஸ்வராஜ் சென்றுள்ளார். அப்போது சில செய்தியாளர்களிடம் பேசிய அவர் 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் தாம் போட்டியிட விரும்பவில்லை எனவும், உடல்நிலை காரணமாக இந்த முடிவுக்கு வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்ததாக  தகவல் வெளியாகியுள்ளது. எனினும் இதனை அதிகாரபூர்வமாக அவர் அறிவிக்கவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in