

ராஜஸ்தானில் சட்டப்பேரவை தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில் ராஜ்புத் வாக்கு வங்கி காங்கிரஸ் பக்கம் சாய வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர், இதனால் ஆளும் பாஜக பதற்றத்தில் இருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேற்கு ராஜஸ்தான் மர்வார் பகுதியில் ராஜபுத்திரர்கள் பிரிவினரின் வாக்கு வங்கி காங்கிரஸ் பக்கம் சாய வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது, ஆளும் பாஜகவிடையே தோல்விப் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்த இடைத்தேர்தலில் ரஜபுத்திரர் பிரிவினர் காங்கிரஸுக்கே தங்கள் ஆதரவு என்று தெரிவித்ததும் இதற்கு சாட்சியாக அமைந்துள்ளது.
ராஜஸ்தான் மக்கள் தொகையில் 12% ராஜ்புத் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், இவர்கள் பாஜக மீது நம்பிக்கை இழந்து விட்டனர். பலவிவகாரங்களில் பாஜக இவர்கள் கோரிக்கையை ஏற்கவில்லை என்பதால் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர். 2014 தேர்தலில் ஜஸ்வந்த் சிங்கிர்கு டிக்கெட் கொடுக்காமல் மறுத்ததால் ராஜ்புத் வகுப்பினர் கடும் கோபத்தில் இருக்கின்றனர். மேலும் வேலையில் இவர்களுக்கான இட ஒதுக்கீடு கோரிக்கையையும் பாஜக செவிகொடுத்து கேட்கவில்லை என்று அவர்கள் காங்கிரஸ் பக்கம் சாய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலு பத்மாவத் திரைப்பட விவகாரம், போலீஸ் என்கவுண்டர்கள் என்று ராஜ்புத் பிரிவினர் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
முன்னாள் முதல்வர் பைரன் சிங் ஷெகாவத் தலைமையில் ராஜ்புத் பிரிவினரின் ஆதரவு பாஜகவுக்கு வலுவாக இருந்தது. ஆனால் 2003-ல் வசுந்தரா ராஜேவை முதல்வராகத் தேர்ந்தெடுத்தப்பட்ட பிறகே ராஜ்புத் ஆதரவு தொடர்ச்சியாக பாஜகவுக்கு வலுவிழந்து வந்துள்ளது. இதனை காங்கிரஸ் பயன்படுத்திக்கொள்ள ஆயத்தமாகி வருகிறது.
மார்வார் ராஜ்புத் சபாவின் ஹனுமன் சிங் காங்டா கூறும்போது, “பாஜக முகாமில் சில சங்கடங்களை எங்களால் ஏற்படுத்த முடிந்தது. ராஜ்புத் வேட்பாளர்க்ளுக்கு காங்கிரஸ் வாய்ப்பளித்தால் ஒவ்வொரு ராஜ்புத் வாக்கும் காங்கிரஸுக்கே” என்றார். பாஜக ஆட்சியில் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக ராஜ்புத் பிரிவினர் உணர்ந்துள்ளனர்.
என்கவுண்டர்கள்:
கடந்த ஜூன் 2017-ல் கேங்ஸ்டர் ஆனந்த்பால் சிங் என்கவுண்டரில் கொல்லப்பட்டதையடுத்து எழுந்த வன்முறைகளில் ராஜ்புத் பிரிவினரின் மூத்த தலைவர்களை பாஜக் குறிவைத்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மாநில அரசுடன் மேற்கொண்ட உடன்பாடு மாநில அரசால் மீறப்பட்டது.
சரித்திரப் பேரேடுக் குற்றவாளி சாதுர் சிங் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரப்பட்ட நிலையில் அது மறுக்கப்பட்டதும் எரியும் தீயில் எண்ணெய் விடப்பட்டது போன்று ஆனது. ஜெய்பூரில் ராஜ்புத் சபா பவன் மீது ரூ.3.50 கோடி சேவை வரி விதிக்கப்பட்டது. அதேபோல் ஆக்ரமிப்பு ஒழிப்பு நடவடிக்கையின் போது ஜெய்பூர் மேம்பாட்டு ஆணையம் ராயல் குடும்பமான ராஜ்மஹால் மாளிகைக்கு சீல் வைக்கப்பட்டது ராஜ்புத் பிரிவினரின் ஆத்திரத்தைத் தூண்டியுள்ளது.
இந்நிலையில், ‘வசுந்தரா ராஜே தன்னை வீழ்த்தவே முடியாது என்ற எண்ணத்தில் இருக்க அனுமதிக்கக் கூடாது. அவர் ராஜஸ்தானின் பூர்வகுடி ராஜ்ப்புத் பிரிவைச் சேர்ந்தவர்தான் என்று தன்னை அவர் கூறிக்கொள்வது தவறானதாகும். அவர் சிந்தியா குடும்பத்தைச் சேர்ந்தவர். இது குவாலியரை ஆண்ட மராத்தா வகுப்பினரைச் சேர்ந்தது. இடைத்தேர்தல்களில் அவரது கட்சி சந்தித்த மிகப்பெரிய தோல்விகள் கட்சியின் பலவீனத்தை அவருக்கு அறிவுறுத்தட்டும்’ ராஜ்புத் பிரிவினர் கருதுகின்றனர்.