

ராம்நகர் நீதிமன்றம் தமக்கு எதிராக பிறப்பித்த பிடிவாரண்ட் உத்தரவை ரத்து செய்ய கோரி சாமியார் நித்யானந்தா தாக்கல் செய்த மனுவை கர்நாடக உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.
வரும் 6-ம் தேதி ஆண்மை பரிசோதனைக்கு அவர் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 2011-ம் ஆண்டு சர்ச்சைக் குரிய சாமியார் நித்யானந்தா மீது முன்னாள் பக்தை ஆர்த்திராவ் ராம்நகர் போலீஸில் பாலியல் பலாத்கார புகார் அளித்தார். இதை யடுத்து நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை செய்ய முடிவெடுக்கப்பட்டது. இதற்கு அவர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஆகவே, ராம்நகர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் போலீஸார் முறை யிட்டனர். நீதிமன்றம் நித்யானந்தா விற்கு ஆண்மை பரிசோதனை நடத்த உத்தரவிட்டது.
ராம்நகர் மாவட்ட அமர்வு நீதி மன்றத்தின் உத்தரவை எதிர்த்து நித்யானந்தா கர்நாடக உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய் தார். கடந்த ஜூலை 16-ம் தேதி கர்நாடக உயர்நீதிமன்றம், 'நித்யானந்தாவிற்கு ஆண்மை பரிசோதனை நடத்துவதற்கு தடை விதிக்க முடியாது.அவர் போலீஸா ரின் விசாரணைக்கு ஒத்துழைத்து, வழக்கை விரைந்து முடிக்க வேண்டும்' என உத்தரவிட்டது.
இந்நிலையில் கடந்த ஜூலை 28-ம் தேதி ராம்நகர் அமர்வு நீதி மன்றத்தில் இவ்வழக்கு விசார ணைக்கு வந்த போது நித்யானந்தா ஆஜராகவில்லை. அதனால் அவருக்கு ஜாமீனில் வெளியே வர முடியாத கைது ஆணை பிறப்பிக்கப் பட்டது.
இந்நிலையில் ராம்நகர் நீதி மன்றம் தனக்கு விதித்த பிடிவாரண்ட் உத்தரவை ரத்து செய்யக்கோரி நித்யானந்தா கர்நாடக உயர் நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இம்மனு மீதான விசாரணை நீதிபதி சத்யநாராயணா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது பேசிய நீதிபதி சத்ய நாராயணா,'ஆர்த்தி ராவ் தொடர் பான பாலியல் வழக்கில் நித்யானந்தா ஆண்மை பரிசோ தனைக்கு ஒத்துழைக்க வேண்டும் என பல முறை நீதிமன்றம் அறி வுறுத்தியுள்ளது. பிடிவாரண்ட் உத்தரவை ரத்து செய்ய முடியாது.
வருகிற 6-ம் தேதி போலீஸார் முன்னிலையில் பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் நடைபெற இருக்கும் ஆண்மை பரிசோதனைக்கு நித்யானந்தா ஒத் துழைக்க வேண்டும். அதனைத் தொடர்ந்து 7-ம் தேதி ராம்நகர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராகி, வழக்கின் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றார்.