Last Updated : 19 Nov, 2018 08:51 AM

 

Published : 19 Nov 2018 08:51 AM
Last Updated : 19 Nov 2018 08:51 AM

நாடாளுமன்றத்தில் வ.உ.சி.உருவப்படம் வைக்க கோரிக்கை

சுதந்திரப் போராட்டத்துக்காக அளப்பரிய பங்களித்த ‘கப்பலோட் டிய தமிழன்' எனும் பெருமைக் கொண்ட வ.உ.சி.யின் உருவப் படத்தை நாடாளுமன்றத்தில் திறக்கக் கோரி பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் சுமித்ரா மஹாஜன் ஆகியோருக்கு பாஜகவின் தமிழக பிற்படுத்தப் பட்டோர் பிரிவின் தலைவரான எஸ்.கே.கார்வேந்தன் கடிதம் அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து 'இந்து தமிழ்’ நாளேட்டிடம் அவர் கூறுகையில், "இதே கோரிக்கையை 2008-ம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்காலத்திலும் நான் வைத்திருக்கிறேன். சோம்நாத் சட்டர்ஜி கேட்டுக் கொண்டதன் பேரில் வ.உ.சியின் உருவப்படமும் நான் தருவதாக கடிதம் அளித் திருந்தேன். அந்த பரிசீலனைக் கோப்பு மூடப்பட்டு விட்டதால் மீண்டும் கோரிக்கை வைத்துள் ளேன்’ என தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் 1947 முதல் 2014-ம் ஆண்டு வரை 104 உருவப்படங்களும் 49 சிலை களும் வைக்கப்பட்டுள்ளன. இதில், சுப்பரமணிய பாரதியார், ராஜாஜி, டாக்டர் பி.சுப்பராயன், ஆர்.கே.சண்முகம் செட்டியார், சேலம் விஜயராகவாச்சாரியார், அனந்தசயனம் ஐயங்கார் மற்றும் எஸ்.சத்தியமூர்த்தி ஆகிய தமிழர்களின் உருவப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன.

மே, 2014-ல் பாஜக தலைமை யிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்த பின்னர், இதுவரை ஒருவருக்கு கூட சிலையோ, உருவப்படமோ வைக்கப்படவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x