

நக்சல்கள் மற்றும் மாவோயிஸ்ட் களைப் புரட்சியாளர்களாக காங் கிரஸ் கட்சியினர் கருதுகின்றனர் என பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டினார்.
ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கு டிசம்பர் 7-ம் தேதி தேர்தல் நடை பெறவுள்ளது. இதையொட்டி இம் மாநிலத்தின் பரத்பூரில் பாஜக சார்பில் நேற்று நடைபெற்ற கூட்டத் தில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
அப்போது அவர் பேசும்போது, “நக் சல்கள் மற்றும் மாவோயிஸ்ட்களை புரட்சியாளர்களாக காங்கிரஸ் கட்சியினர் கருதுகின்றனர். ராணுவத் தளபதியை தெருவில் வன்முறை குற்றங்களில் ஈடுபடு பவர் எனக் கூறுகின்றனர். இவர் களா நாட்டை காப்பாற்ற போகி றார்கள்?
ராணுவத்தில் ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்டத்தை நடை முறைப்படுத்தியுள்ளோம். இதற் காக காங்கிரஸ் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. தியாகிகளை அக்கட்சி அவமரியாதை செய்தது. கடந்த 4 ஆண்டுகளில் ஊழல் விளையாட்டுகள் நிறுத்தப்பட்டு விட்டன.
2014-க்கு பிறகு காஷ்மீரில் தீவிர வாதத்தை கட்டுப்படுத்துவதில் அரசு சாதனை படைத்துள்ளது. உங்கள் வாக்குகளைக் குறைவாக மதிப்பிடாதீர்கள். உங்கள் வாக்கு நாட்டை பாதுகாத்துள்ளது. தீவிர வாத தாக்குதல்களைக் குறைத் துள்ளது. உலகம் முழுவதும் புகழை ஈட்டியுள்ளது” என்றார்.
முன்னதாக நாகார் என்ற இடத்தில் பிரதமர் பேசும்போது, “நமது பேரன், பேத்திகளுக்காக நாங்கள் வாக்கு கேட்கவில்லை. உங்கள் நலனுக்காகவும் உங்கள் கனவுகள் நிறைவேற உதவிடவும் வாக்கு கேட்கிறோம்.
நான்கு தலைமுறைகளாக மக்களுடன் தொடர்பு இல்லாத வர்களால் சாமானிய மக்களின் வலிகளைப் புரிந்துகொள்ள முடி யாது. அனைத்திலும் வளர்ச்சி, அனைவருக்குமான வளர்ச்சி என்பதே எங்கள் தராக மந்திரம்.
பாலைவன மாநிலமான ராஜஸ் தானில் தண்ணீர் மிகப்பெரிய பிரச்சினையாக இருந்தது. இந்நிலையில் ஒன்றரை லட்சம் ஹெக்டேர் நிலத்துக்கு முதல்வர் வசுந்தரா ராஜே தலைமையிலான பாஜக அரசு பாசன வசதி அளித்துள்ளது. அவரது அரசுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும்” என்றார். - பிடிஐ