கர்நாடக கோயில்களுக்கு ஆன்மிக சுற்றுலா: ஐஆர்சிடிசி அறிவிப்பு

கர்நாடக கோயில்களுக்கு ஆன்மிக சுற்றுலா: ஐஆர்சிடிசி அறிவிப்பு
Updated on
1 min read

ஷீரடி, மந்திரலாயம் மற்றும் கர்நாடக ஆன்மிகத் தலங்கள், கோவா தேவாலயங்களுக்கு சிறப்பு ஆன்மிக சுற்றுலாவை ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஐஆர்சிடிசி அதிகாரிகள் கூறியதாவது:

இந்திய ரயில்வேயும், இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமும் (ஐஆர்சிடிசி) இணைந்து நடத்திவரும் ஆன்மிக சுற்றுலா, மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், கர்நாடக மாநில ஆன்மிகத் தலங்களை தரிசிப்பதற் கான சுற்றுலாவை ஐஆர்சிடிசி ஏற்பாடு செய்துள்ளது. இந்த ஆன்மிக சுற்றுலா ரயில் டிசம்பர் 14-ம் தேதி மதுரையில் இருந்து புறப்படும். திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், சென்னை எழும்பூர், காட்பாடி, சேலம், ஈரோடு, கோவை போத்தனூர் வழியாக கர்நாடக மாநிலம் உடுப்பிக்கு செல்லும்.

அங்கிருந்து உடுப்பி கிருஷ்ணர் மற்றும் கர்நாடகாவின் மற்ற கோயில்களான கொல்லூர் மூகாம் பிகை, சிருங்கேரி சாரதா பீடம், ஹோரநாடு அன்னபூரணி, தர்மஸ்தலா மஞ்சுநாதர் ஆகிய ஆலயங்களுக்கு சுற்றுலா அழைத் துச் செல்லப்படுகிறது.இந்த சுற்றுலா 5 நாட்கள் கொண்டது. ஒருவருக்கு கட்டணம் ரூ.6,930.

இதேபோல, கோவாவில் உள்ள தேவாலயங்கள், கடற்கரைகள் கொண்ட சுற்றுலாவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது 5 நாட்கள் கொண்டது. ஒருவருக்கு கட்டணம் ரூ.4,725.

ஆங்கிலப் புத்தாண்டை முன் னிட்டு ஜனவரி 2-ம் தேதி மதுரை யில் இருந்து புறப்பட்டு சென்னை எழும்பூர் வழியாக ஷீரடி, பண்டரி புரம், மந்த்ராலயம் செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 7 நாட் கள் கொண்ட இந்த யாத்திரையில் பங்கேற்க ஒருவருக்கு கட்டணம் ரூ.6,615. ரயில் கட்டணம், சைவ உணவு, தங்கும் வசதி உள்ளிட்டவை இதில் அடங்கும்.

இதுகுறித்து மேலும் விவரங்களை அறிய 9003140714, 9003140680 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in