Published : 26 Nov 2018 12:03 PM
Last Updated : 26 Nov 2018 12:03 PM

கேரள அமைச்சர் மேத்யூ தாமஸ் திடீர் ராஜினாமா

கேரள மாநில நீர்பாசனத்துறை அமைச்சர் மேத்யூ தாமஸ் இன்று பதவி விலகினார். தனது ராஜினாமா கடிதத்தை அவர் முதல்வர் பினராயி விஜயனிடம் நேரில் அளித்தார்.  

கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அமைச்சரவையில், கூட்டணி கட்சியான  மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மேத்யூ தாமஸ் நீர்வளத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார்.

இந்தநிலையில் மேத்யூ  தாமஸ் இன்று தன் பதவியை ராஜினாமா செய்தார். திருவனந்தபுரத்தில் முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து ராஜினாமா கடிதத்தை நேரில் அளித்தார். மதச்சார்பற்ற ஜனதாதளக் கட்சி தலைமை இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் கேரள மாநில தலைவரும் பாலக்காடு சித்தூர் தொகுதி எம்எல்ஏவுமான கிருஷ்ணன்குட்டியை அமைச்சர் பதவியில் அமர்த்த அக்கட்சித் தலைமை முடிவு செய்துள்ளது. இதற்கு ஏதுவாக மேத்யூ தாமஸ் பதவி விலகியுள்ளதாக கூறப்படுகிறது.

கிருஷ்ணன் குட்டி கேரள மாநில புதிய அமைச்சராக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x