

போலீஸ் தடையை மீறி சபரிமலை செல்ல முயன்ற சுரேந்திரன் அண்மையில் கைது செய்யப்பட்டார். அவரை 14 நாட்கள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். பின்னர் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.
இதனிடையே சபரிமலையில் வன்முறையில் ஈடுபட்டது தொடர்பான வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து 2-வது முறையாக ஜாமீன் கோரி பத்தினம்திட்டா, ராணியில் உள்ள நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. ஜாமீன் மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் தள்ளுபடி செய்தார்.