Published : 29 Nov 2018 09:05 AM
Last Updated : 29 Nov 2018 09:05 AM

கேரள சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சி கடும் அமளி: சபரிமலை விவகாரத்தில் முதல்வர் பினராயி விஜயன் புகார்

சபரிமலையை கலவரங்களுக்கு பெயர்போன அயோத்தியாக மாறு வதற்கு அனுமதிக்க மாட்டோம் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

கேரள சட்டப்பேரவை நேற்றுகூடிய தும், சபரிமலை விவகாரத்தை எதிர்க் கட்சியான காங்கிரஸ் உறுப்பினர்கள் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். சபரிமலையில் பிறப்பிக்கப்பட்டுள்ள தடை உத்தரவுகளை திரும்பப் பெற வேண்டும்; கைது செய்யப்பட்டிருக் கும் ஐயப்ப பக்தர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி அவர்கள் அவையின் மையப் பகுதிக்கு வந்து கோஷம் எழுப்பினர்.

இதனைத் தொடர்ந்து, முதல்வர் பினராயி விஜயன் பேசியதாவது:

சபரிமலையில் கேரள அரசு தன்னிச் சையாக எந்த நடவடிக்கையும் எடுக் கவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மட்டுமே அரசு செயல்படுத்தி வருகிறது. சில இந்து அமைப்புகளுடன் கைகோத்து சபரிமலையில் குழப்பத்தை ஏற்படுத்த காங்கிரஸ் முயற்சிக்கிறது. இந்த விவகாரத்தை அக்கட்சி அரசியலாக்குகிறது.

சபரிமலையை கலவரங்களுக்கு பெயர்போன அயோத்தியாக மாற நாங்கள் அனுமதிக்கமாட்டோம். அதே போல், சபரிமலையில் அமைதி திரும்பு வரை அங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கும் தடை உத்தரவுகளையும் அரசு திரும்பப் பெறாது. இவ்வாறு பினராயி விஜயன் தெரிவித்தார்.

இதனிடையே, சபரிமலையில் எந்தவிதப் போராட்டங்களும், ஆர்ப் பாட்டங்களும் நடைபெறக் கூடாது என கேரள உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது.

அதிகாரி மாற்றம்

சபரிமலையில் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட காவல்துறை அதி காரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சபரிமலையின் நிலக்கல் பகுதியில் பாதுகாப்புப் பணிக்காக நிறுத்தப்பட்டிருந்த போலீஸாருக்கு தலைமை பொறுப்பு வகித்தவர் எஸ்.பி. யாதிஷ் சந்திரா. இவருக்கும், அண்மையில் சபரிமலை சென்ற பொன் ராதாகிருஷ்ணனுக்கும் இடையே வாகனத்தை அனுமதிப்பது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த சூழ்நிலையில், தற்போது யாதிஷ் சந்திரா மாற்றப்பட்டு அவரது இடத்துக்கு உளவுத்துறை ஐ.ஜி. அசோக் யாதவை கேரள அரசு நியமித்துள்ளது.

வருமானம் சரிவு

சபரிமலையில் கடந்த ஆண்டு முதல் வாரத்தில் ரூ.9.88 கோடிக்கு அரவணை விற்பனை நடந்துள்ளது. நடப்பு ஆண்டில் இது ரூ.3.16 கோடியாக குறைந்துள்ளது.

கடந்த ஆண்டு, முதல் 6 நாட்களில் கோயில் உண்டியலில் ரூ.7.33 கோடி ரொக்கம் காணிக்கையாக வந்தது. நடப்பாண்டில் ரூ.3.83 கோடி மட்டுமே காணிக்கையாக வந்துள்ளது. இதுபோல், அப்பம் வருமானம் ரூ.29.31 லட்சத்தில் இருந்து ரூ.1.47 லட்சமாக குறைந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x