Published : 29 Nov 2018 10:34 AM
Last Updated : 29 Nov 2018 10:34 AM

தெலங்கானாவில் ரூ. 2 லட்சம் வரை வேளாண் கடன் ரத்து: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாக்குறுதி

தெலங்கானாவில் ரூ.2 லட்சம் வரை வேளாண் கடன் ரத்து செய்யப்படும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உறுதி அளித்தார்.

தெலங்கானா சட்டப்பேர வைக்கு டிசம்பர் 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி காங்கிரஸ், தெலுங்கு தேசம், இந் திய கம்யூனிஸ்ட், ஜனசமிதி ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. இந்நிலையில் கம்மம் நகரில் கூட்டணி வேட்பாளர்களை ஆத ரித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் சுரவரம் சுதாகர் ரெட்டி உள்ளிட்டோர் ஒரே மேடையில் பிரச்சாரம் செய்தனர்.

இதில் ராகுல் காந்தி பேசும் போது, “பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, உச்ச நீதிமன்றம், ரிசர்வ் வங்கி, சிபிஐ, அமலாக்கத் துறை, வருமான வரித் துறை என அனைத்து அமைப்புகளின் கவுர வம் சீரழிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடிக்கு ‘பி’ குழுவாக தெலங் கானா முதல்வர் கேசிஆர் (சந்திர சேகர ராவ்) செயல்படுகிறார். முதலில் இந்த ‘பி’ குழுவையும் பிறகு மத்தியில் உள்ள ‘ஏ’ குழுவான பாஜகவையும் தோற்கடிப்போம்.

தெலங்கானாவில் கேசிஆர் குடும்பத்தைத் தவிர மற்றவர்கள் முன்னேறவில்லை. இங்கு விவசாயி கள் தற்கொலை அதிகமாகி விட்டது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை. விற்பனை விலை நிர்ணயம் செய்யக் கோரி போராடிய விவசாயிகள் மீது தடியடி நடத்தப்பட்டது.

இங்கு காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்ததும், ரூ.2 லட்சம் வரை விவசாயிகளின் வங்கிக் கடன் ரத்து செய்யப்படும். மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வட்டியின்றி தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும். வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள வீடில்லா அனைவருக்கும் ரூ. 5 லட்சம் செலவில் வீடு கட்டித்தரப்படும்” என்றார்.

சந்திரபாபு நாயுடு பேசும்போது, “தெலங்கானா வளர்ச்சிக்கு நான் ஒருபோதும் குறுக்கே நின்றதில்லை. ஆனால் என் மீது கேசிஆர் வீண்பழி சுமத்துகிறார். கடந்த 37 ஆண்டுகளாக காங்கி ரஸும், தெலுங்கு தேசமும் எதிரெதிர் கட்சிகளாக இருந்தாலும் தற்போது நாட்டின் நலனுக்காக இணைந்துள்ளோம். இந்தக் கூட்டணி அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் வெற்றி பெறும். மாநிலக் கட்சிகள் அனைத்தும் பாஜகவுக்கு எதிராக இணைய வேண்டியது அவசியம்” என்றார்.

இதையடுத்து அமீர்பேட்டை மற்றும் நாம்பல்லியில் ராகுல் காந்தி, சந்திரபாபு நாயுடு ஒரே மேடையில் பிரச்சாரம் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x