Published : 22 Nov 2018 09:47 AM
Last Updated : 22 Nov 2018 09:47 AM

செல்வாக்கில் அமிதாப் பச்சனுக்கு முதலிடம்: 2-ம் இடத்தில் தீபிகா படுகோன்

இந்தியாவில் செல்வாக்கு பெற்ற நட்சத்திரங்கள் பட்டியலில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் முதலிடத்தை பிடித்துள்ளார்.

பாலிவுட் நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் ஆகியோரில் மக்கள் மனதில் அதிகம் செல்வாக்கு பெற்று விளங்குபவர்கள் யார் என்பது குறித்து 'யு காவ்' என்ற பிரபல நிறுவனம் அண்மையில் ஆய்வு மேற்கொண்டது. இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் சுமார் 60 லட்சம் பேரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அழகியல், ஆளுமை, வசீகரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை மையமாக வைத்து நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இந்த டாப் - 10 பட்டியலில் முதலிடத்தில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் இடம்பெற்றுள்ளார். அதற்கு அடுத்தபடியாக, இரண்டாம் இடத்தில் நடிகை தீபிகா படுகோன் உள்ளார்.

கிரிக்கெட் வீரர்கள் மகேந்திர சிங் தோனி, சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் முறையே 3 மற்றும் 4-வது இடத்திலும், நடிகர் அக் ஷய் குமார் 5-வது இடத்திலும் உள்ளனர். 6-வது இடத்தை கிரிக்கெட் வீரர் விராட் கோலி பிடித்துள்ளார்.

நடிகர்கள் ஆமீர் கான், ஷாரூக் கான் ஆகியோர் முறையே 7 மற்றும் 8-வது இடத்தையும், நடிகைகள் ஆலியா பட், பிரியங்கா சோப்ரா ஆகியோர் 9 மற்றும் 10-ம் இடத்தையும் கைப்பற்றியுள்ள னர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x