Last Updated : 17 Nov, 2018 11:02 AM

 

Published : 17 Nov 2018 11:02 AM
Last Updated : 17 Nov 2018 11:02 AM

கணவர் உயிரோடு இருக்கும்போதே  விதவைக்கான பென்ஷன் வாங்கும் பெண்கள்: உத்தரப் பிரதேசத்தில் வினோத மோசடி

உத்தரப் பிரதேசத்தில் கணவர் உயிரோடு இருக்கும்போதே 22  பெண்கள் விதவைக்கான நல்வாழ்வு உதவித்தொகை பெற்றுவரும் அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம், சீதாபூர் மாவட்டத்தைச் சேர்ந்த கிராமம் பாட்ஸ்காஞ்ச். இக்கிராமத்தைச் சேர்ந்த சந்தீப் குமார் என்பவரின் மனைவியின் செல்பேசிக்கு அவரது கணக்கிற்கு ரூ.3000 தொகை வந்துள்ளதாக கடந்த 10 நாட்களுக்கு முன் ஒரு தகவல் வந்துள்ளது. 

சந்தீப் குமார், தன் மனைவியின் கணக்கில், எவ்வாறு இவ்வளவு தொகை வந்தது என்பதை அறிய அவர் வங்கிக்கு சென்றார். அப்போது தான் உயிரோடு இருக்கும்பாதே தான் இறந்துவிட்டதாக மனைவிக்கு விதவைகளுக்கான நலத்திட்டத்தின்கீழ் உதவித்தொகை வருவதை அவரால் கண்டுபிடிக்க முடிந்தது.

இதுகுறித்து அவர் வங்கியில் விசாரித்தபோது மேலும் பல உண்மைகள் தெரியவந்தது, அதாவது அவரது மனைவிக்கு மட்டுமல்ல அவரது குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் இதுபோல விதவைக்கான உதவித்தொகை கணக்கில் வருவது தெரியவந்தது. ஆனால் அவர்கள் குறிப்பிடும் நபர்களின் கணவர்கள் அனைவருமே உயிரோடு வாழ்ந்துகொண்டிருப்பவர்கள்.

இதுகுறித்து சந்தீப் குமார் தெரிவித்ததாவது:

வங்கியிலிருந்து என் மனைவி கணக்கிற்கு ரூ.3000 வந்துள்ளதாக வங்கியிலிருந்து ஒரு தகவல் வந்தது. பின்னர் வங்கிக்கு சென்று நான் இதுகுறித்து விசாரித்தேன். நான் உயிரோடு இருக்கும்போதே என் மனைவிக்கு விதவை உதவித்தொகை பெற்றுவருவதை அறிந்தேன்.

என் மனைவி மட்டுமல்ல, என் மாமியார், என் மனைவியின் சகோதரி ஆகியோரும் கூட அவர்களது கணவர்கள் உயிர் வாழ்ந்துகொண்டிருக்கும்போதே விதவைக்கான உதவித்தொகை பெற்றுவருகிறார்கள். இதுகுறித்து ஒரு புகாரை நான் விசாரணை அலுவலகத்துக்கு அனுப்பிவைத்தேன். ஆனால் இதுகுறித்து  எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமலிருந்தது.

பின்னரே இதை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு இதை நான் எடுத்துச்செல்ல வேண்டியிருந்தது'' என்றார்.

தற்போது நடைபெற்ற ஆரம்பக்கட்ட விசாரணையில், குமாரின் குடும்பத்தினர் மட்டுமல்ல பல பெண்களும் தங்கள் கணவர்கள் உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கும்போதே விதவைக்கான நல்வாழ்வுத்திட்டத்தின்கீழ் உதவித்தொகைகள் பெற்று வருவகிறார்கள். கிட்டத்தட்ட 22 பெண்கள் சீதாபூர் மாவட்டத்தில் விதவைத்தொகையை தவறாக பெற்றுவருவது தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

இப்பிரச்சினையில் அதிகாரிகள் அலட்சியம் காட்டிவந்ததால், தற்போது மாவட்ட நிர்வாகம் நேரடியாக தனது கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ளதாகவும் இதில் யார் குற்றவாளி என்பதை கண்டறிய ஒரு முழுமையான விசாரணைக்கு தான் உத்தரவிட்டுள்ளதாகவும் சீதாபூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x