Last Updated : 29 Nov, 2018 09:27 PM

 

Published : 29 Nov 2018 09:27 PM
Last Updated : 29 Nov 2018 09:27 PM

சட்டவிரோதக் குடியேறிகள் ஒவ்வொருவராக நாட்டை விட்டுத் தூக்கி வெளியே வீசப்படுவார்கள் : அமித் ஷா ஆவேசப்பேச்சு

வங்கதேசத்திலிருந்து சட்ட விரோதமாகக் குடியேறியுள்ளவர்கள் ஒவ்வொருவராக வெளியேற்றப்படுவார்கள் என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா கடுமையாகப் பேசியுள்ளார்.

ராஜஸ்தான் தேர்தலை முன்னிட்டு இன்று கரவ்லி மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அமித் ஷா, சட்டவிரோதக் குடியேறிகள் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியைக் கடுமையாகச் சாடினார்.

சட்டவிரோதமாக ஊடுருவியர்களை அனுமதிக்க வேண்டும் என்கிறாரா ராகுல் காந்தி என்று அவரை விமர்சனம் செய்தார்.

“கடந்த 10 ஆண்டுகள் மத்தியில் ஆட்சி புரிந்த காங்கிரஸ் சட்டவிரோத குடியேறிகளைக் கட்டுப்படுத்தவில்லை. எனவே வசுந்தரா ராஜேவுக்கு வாக்களியுங்கள் லோக்சபா தேர்தலில் மோடிக்கு வாக்களியுங்கள்.

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை அசாம் முதல் குஜராத் வரை பாஜக அரசு சட்ட விரோதக் குடியேறிகளை ஒவ்வொருவராக தூக்கி வெளியே வீசும்.

ராஜஸ்தானிலும் மத்தியிலும் ஆளும் பாஜக அனைத்து சமூகப்பிரிவினரின் நலன்களுக்காகவும் திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது. உலகம் நெடுகும் இந்தியாவை பிரதமர் மோடி பெருமைப் படுத்தியுள்ளார்.

ஆட்சியைப் பிடித்து விடலாம் என்று காங்கிரஸ் கட்சி பகல்கனவு காண்கிறது. மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு நடைபெற்ற தேர்தல்களில் தங்களது தோல்விகளை காங்கிரஸார் நினைத்துப் பார்க்க வேண்டும்” என்று பேசினார் அமித் ஷா. 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x