Published : 08 Nov 2018 08:20 AM
Last Updated : 08 Nov 2018 08:20 AM

மாவோயிஸ்ட் புதிய தலைவராக கேசவ ராவ் ஒருமனதாக தேர்வு

தென்னிந்தியாவில் உள்ள இயக்கமான ‘பீபுள்ஸ் வார்’ அமைப் பும், வட இந்தியாவின் ‘மாவோ யிஸ்ட் கம்யூனிஸ்ட் சென்ட்ரல் ஆஃப் இந்தியா’ (எம் சிபிஐ) மற்றும் மற்ற சமூக போராட்ட அமைப்பு களும் கடந்த 2004-ம் ஆண்டு ஒன்றாக இணைந்து சிபிஐ (மாவோயிஸ்ட்) என உருவானது.

கடந்த 1993-ல் ‘பீபுள்ஸ் வார்’ அமைப்பின் செயலாளராக பணி யாற்றிய கொண்டபல்லி சீதாரா மய்யா என்பவர் விலகிக் கொண்ட தால், மாபள்ள லட்சுமண ராவ் என்கிற கணபதி, 2004-ம் ஆண்டு வரை இதன் செயலாளராக தொடர்ந்தார். மாவாயிஸ்ட் இயக் கம் உருவானது முதல் கணபதியே பொதுச்செயலாளராக பதவி வகித்து வருகிறார். தற் போது இவரின் வயது 69 ஆகும். மேலும், சில உடல் உபாதைகளும் உள்ளன. இந்த இயக்கத்தில் உள்ள பலர் 60 வயது நிரம்பிய வர்களாவர்.

ரூ.25 லட்சம் பரிசு

கணபதி பற்றி தகவல் கொடுத்தால் ரூ. 25 லட்சம் பரிசு என ஆந்திரா, தெலங்கானா சத்தீஸ்கர், ஒடிசா மாநில அரசுகள் அறிவித்துள்ளன.

இந்நிலையில் இவரின் உடல் நலம் சரியில்லாத காரணத்தினால், இவரது பொறுப்பில் ஆந்திர மாநி லம், காகுளம் மாவட்டத்தை சேர்ந்த எம்.டெக் பட்டதாரியான பஸ்வராஜு என்கிற கேசவ ராவ் மாவோயிஸ்ட் அமைப்பின் புதிய பொதுச் செயலாளராக நியமனம் செய்ய ஒருமனதாக தேர்வு செய்யப் பட்டுள்ளார். இவரது தலைக்கும் போலீஸார் ஏற்கெனவே ரூ. 25 லட்சம் பரிசு அறிவித்துள்ளனர். கணபதி பொதுச் செயலாளராக தனது பதவியை ராஜினாமா செய்தாலும், அவர் மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய ஆலோச கராகவும், செயற்குழு உறுப் பினராகவும் பதவி வகிக்க உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x