

காங்கிரஸ் கட்சி அன்று விதைத் ததை இப்போது அறுக்கிறது என்று சிவசேனா கட்சி விமர்சனம் செய்துள்ளது.
குஜராத் ஆளுநராக இருந்த கமலா பெனிவால் இரண்டு மாதங் களில் ஓய்வு பெற இருந்த நிலை யில் ஜூலை 9-ம் தேதி மிசோரம் மாநிலத்துக்கு மாற்றப்பட்டார். கடந்த புதன்கிழமை அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் கமலா பெனிவால் பதவி பறிக்கப்பட்டிருக்கிறது என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இதை மறுத்துள்ள மத்திய அரசு, ரூ.1000 கோடி நில மோசடி புகார் காரணமாகவே அவர் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டிருக்கிறது என்று விளக்கம் அளித்துள்ளது.
இந்நிலையில் கமலா பெனி வால் நீக்கம் சரியே என்று சிவசேனை கட்சி மத்திய அரசுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித் துள்ளது. இதுகுறித்து அந்தக் கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவில் வெளியான கட்டுரையில் கூறியிருப்பதாவது:
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த போது அப்போதிருந்த ஆளுநர் களை அடுத்தடுத்து மாற்றியது. அவர்கள்தான் இப்போது பிரதமர் நரேந்திர மோடியை குற்றம் சாட்டுகிறார்கள்.
ஆளுநர் பதவி அரசியல் சாசன பதவி என்பதை ஒப்புக் கொள் கிறோம். ஆனால் அந்தப் பதவியை காங்கிரஸ் துஷ்பிரயோகம் செய்து, அரசியல் எதிரிகளை பழி வாங்கியது. காங்கிரஸால்தான் ஆளுநர் பதவியின் கவுரவத்துக்கு இழுக்கு ஏற்பட்டது.
கமலா பெனிவால் குஜராத் ஆளுநராக இருந்தபோது அரசு விமானம், ஹெலிகாப்டரை தனது விருப்பம்போல் பயன்படுத்தினார். அவரது விமான பயணத்தால் மாநில அரசுக்கு ரூ.1200 கோடி சுமை ஏற்பட்டுள்ளது.
கமலா பெனிவால் விவகாரத் தில் காங்கிரஸ் கூக்குரலிடுவதால் எந்தப் பயனும் இல்லை. அவர்கள் எவ்வளவு சேற்றை வாரியிறைத்தாலும் அது அவர்கள் முகத்தில்தான் விழும். காங்கிரஸ் கட்சி அன்று விதைத்ததை இன்று அறுக்கிறது.
உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் இன்றைய காலகட்டத்தில் ஆளுநர் பதவி என்பது “வெள்ளை யானையை” போன்றதாகிவிட்டது. (அதிக செலவு, அதிக பிரச்சினைகளை ஏற்படுத்தும் விவகாரத்தைக் குறிப் பதாகும்)
இவ்வாறு சாம்னா நாளிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.