

கடந்த 97-98 ஆம் ஆண்டு நடந்த காவல்துறை சப்-இன்ஸ் பெக்டர் நேரடி தேர்வில் பங்கேற்ற சிலர் தங்களுக்கு தகுதி இருந்தும் உதவி ஆய்வாளர் பணி வழங்கப்படவில்லை என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மனுதாரர் செந்தில்குமார் உள்ளிட்டோர் தமிழக அரசுக்கு எதிராக தாக்கல் செய்த மனு நீதிபதிகள் ஜே.எஸ்.கேகர், ரோஹின்டன் நரிமன் அடங்கிய அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நாகேஸ்வர ராவ் வாதிட்டதாவது: தமிழகத்தில் சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 1997-98ம் ஆண்டு நேரடியாக உதவி ஆய்வாளர் பணிக்கு தேர்வு நடத்தப்பட்டு, மாநில அளவில் தர வரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு பணி வழங்கப்பட்டது.
பணியிடத்தின் எண்ணிக் கையை விட தேர்வு செய்யப் பட்டோரின் எண்ணிக்கை அதிக மாக இருந்ததால், கூடுதலாக இருந்தவர்களுக்கு பணி வழங்க முடியவில்லை. வழக்கு தொடர்ந்திருப்பவர்களில் 11 பேர் மட்டுமே ‘கட்-ஆப்’ மதிப் பெண்ணை விட அதிக மதிப்பெண் பெற்றுள்ளவர்கள். மற்றவர்கள் பணி கோர தகுதியில்லை என்று அவர் வாதிட்டார்.
மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கே.வெங்கடரமணி, ‘பாதிக்கப்பட்ட 11 பேருக்கும் 1997-ம் ஆண்டு முதல் பணிமூப்பு வழங்க முடியாது என்பதை ஏற்றுக் கொள்கிறோம். இன்றைய நிலவரப்படி உதவி ஆய்வாளர் பணி வழங்குவதை ஏற்கத் தயார்,’ என்றார்.
இன்றைய நிலவரப்படி, உதவி ஆய்வாளர்களாக இருப்பவர்களின் கீழ், இவர்களது நியமனம் இருக்கும் என்றும் நீதிபதிகள் உத்தரவில் குறிப்பிட்டனர்