ஊழல் வழக்கில் லாலுவிடம் விசாரணை

ஊழல் வழக்கில் லாலுவிடம் விசாரணை
Updated on
1 min read

ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் மீதான ஐஆர்சிடிசி ஊழல் வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது லாலு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், லாலுவின் உடல்நிலை மோசமாகி இருப்பதால் அவரால் நேரில் ஆஜராக முடியவில்லை என்று தெரிவித்தார்.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி அருண் பரத்வாஜ், வரும் டிசம்பர் 20-ம் தேதி வீடியோ கான்பரன்ஸ் மூலம் லாலுவிடம் விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

கால்நடைத் தீவன வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட லாலு பிரசாத், ராஞ்சியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டிருப்பதால் தற்போது அவர் ராஞ்சியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.

வரும் டிசம்பர் 20-ம் தேதி சிறை அல்லது மருத்துவமனையில் இருந்தவாறு வீடியோ கான்பரன்ஸ் மூலம் லாலுவிடம் நீதிபதி விசாரணை நடத்த உள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in