

பாகிஸ்தானில் உள்ள குருத்வாராக் களுக்கு செல்ல இந்திய தூதரக அதிகாரிகளுக்கு அந்த நாட்டு அரசு அனுமதி மறுத்துள்ளது. இதற்கு இந்திய தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீக்கிய மதத்துக்கு அடித்தள மிட்ட முதலாவது குரு குருநானக் கின் 549-வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. பாகிஸ்தா னின் பஞ்சாப் மாகாணம், நங்கனா சாகிப்பில் குருநானக் பிறந்தார். அங்குள்ள குருத்வாராவில் குருநானக் ஜெயந்தி கடந்த 21-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை கொண்டாடப் படுகிறது. இந்த விழாவில் பங் கேற்க இந்தியாவில் இருந்து 3,000 பக்தர்கள் பாகிஸ்தான் சென்றுள் ளனர்.
பாகிஸ்தானில் பணியாற்றும் இந்திய தூதரக அதிகாரிகள் கடந்த புதன்கிழமை இரவு நங்கனா சாகிப் குருத்வாராவுக்கு சென்றனர். அவர்களுக்கு அனுமதி மறுக்கப் பட்டது. இதேபோல லாகூரில் இருந்து 37 கி.மீ. தொலைவில் உள்ள சச்சா சவுதா பகுதியிலும் குருநானக் நினைவாக குருத்வாரா உள்ளது. அங்கு கடந்த வியாழக்கிழமை சென்ற இந்திய தூதரக அதிகாரிகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது.
பாகிஸ்தானின் நடவடிக்கைக்கு இந்திய தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை நேற்று வெளியிட்ட அறிக்கை யில் கூறியிருப்பதாவது:
தொடர்ந்து 3-வது ஆண்டாக பாகிஸ்தான் குருத்வாராக்களுக்கு செல்ல இந்திய தூதரக அதிகாரி களுக்கு அனுமதி மறுக்கப் பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங் களுக்காக அனுமதி வழங்கப் படவில்லை என்று பாகிஸ்தான் கூறுகிறது. இதை ஏற்க முடியாது. சர்வதேச விதிகளை மீறி அந்த நாட்டு அரசு செயல்படுகிறது.
பாகிஸ்தான் பக்தர்கள் இந்தியா வுக்கு ஆன்மிக சுற்றுலா வரும் போது அவர்களை சந்திக்க, புனித தலங்களுக்குச் செல்ல பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால் இந்திய பக்தர்களை சந்திக்கவும் புனித தலங்களுக்கு செல்லவும் இந்திய தூதரக அதிகாரிகளுக்கு அனுமதி மறுக்கப்படுவது சர்வதேச விதி மீறலாகும்.
புனித தலங்கள் தொடர்பாக கடந்த 1974-ம் ஆண்டில் இருநாடு களுக்கும் இடையே உடன் படிக்கை கையெழுத்தானது. இந்த உடன்படிக்கையையும் பாகிஸ் தான் அரசு அப்பட்டமாக மீறி வரு கிறது. இதுதொடர்பாக பாகிஸ்தான் அரசிடம் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.