Last Updated : 01 Nov, 2018 08:53 AM

 

Published : 01 Nov 2018 08:53 AM
Last Updated : 01 Nov 2018 08:53 AM

உ.பி. ஹஷிம்புரா படுகொலை வழக்கு: 16 முன்னாள் காவலர்களுக்கு ஆயுள் தண்டனை- டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு

ஹஷிம்புரா படுகொலை வழக்கு தொடர்பாக முன்னாள் காவல்துறை அதிகாரிகள் 16 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து டெல்லி உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித் தது.

உத்தரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் கடந்த 1987-ம் ஆண்டு மதக்கலவரம் மூண்டது. சுமார் 3 மாதங்கள் நடந்த இந்தக் கலவரத்தில் 350 பேர் உயிரிழந்தனர்.

இதனிடையே, மீரட் மாவட்டத் தில் உள்ள ஹஷிம்புரா பகுதிக்கு கலவரத்தை அடக்கச் சென்ற காவல்துறை அதிகாரிகள் சிலர், குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த இளைஞர்கள் 42 பேரை தனியாக அழைத்துச் சென்று சுட்டுக் கொன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

நாடு முழுவதும் பெரும் அதிர் வலைகளை ஏற்படுத்திய இச் சம்பவம் தொடர்பாக உத்தரபிரதேச அரசின் உத்தரவின்பேரில், 1988-ம் ஆண்டு விசாரணை தொடங்கியது. இதில் 19 போலீஸார் மீது குற்றம்சாட்டப்பட்டது. இவர்களில் 3 பேர் விசாரணை காலத்திலேயே மரணம் அடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து, 16 போலீஸார் மீதான விசாரணை, உத்தரபிரதேச மாநிலம் காஸியாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. பின்னர், பாதுகாப்பு காரணங்களுக்காக இவ்வழக்கு, டெல்லியில் உள்ள டிஸ்ஹசாரி நீதிமன்றத்துக்கு 2002-ம் ஆண்டு மாற்றப்பட்டது. இந்த இடைப்பட்ட காலகட்டத்தில், குற்றம்சாட்டப்பட்ட போலீஸார் அனைவரும் பணி ஓய்வு பெற்றுவிட்டனர்.

சுமார் 13 ஆண்டுகால விசாரணைக்குப் பிறகு, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 16 போலீஸாரையும் விடுதலை செய்து டிஸ்ஹசாரி நீதிமன்றம் கடந்த 2015-ம் ஆண்டு தீர்ப்பளித்து. போதிய ஆதாரங்கள் இல்லாததால், அவர்கள் விடுவிக்கப்படுவதாக அந்த உத்தரவில் கூறப்பட்டிருந்தது.

மேல்முறையீடு - தீர்ப்பு

இந்த தீர்ப்பை எதிர்த்து உத்தரபிரதேச அரசு, தேசிய மனித உரிமைகள் ஆணையம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கில் வாத, பிரதிவாதங்களைக் கேட்டறிந்த நீதிமன்றம், கடந்த செப்டம்பர் 6-ம் தேதி தமது தீர்ப்பை ஒத்திவைத்தது.

இந்நிலையில், இவ்வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் எஸ்.முரளிதர் மற்றும் வினோத் கோயல் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று பிறப்பித்தது. அதில், குற்றம்சாட்ட முன்னாள் காவல் துறை அதிகாரிகள் 16 பேருக் கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x