

ஆந்திரா மீது மத்திய அரசு அதிகாரம் செலுத்தினாலோ அல்லது வளர்ச்சியை தடுக்கும் விதத்தில் நடந்து கொண்டாலோ பொறுத்துக்கொள்ள மாட்டேன் என சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆந்திர அரசு மீதும், ஆந்திர மக்கள் மீதும் வளர்ச்சியை தடுக்கும் விதத்தில் பாஜக நடந்து கொண்டது. இதற்காகத்தான் நான் அரசியல் ரீதியாக அக்கட்சிக்கு சரியான பாடம் புகட்ட முடிவு செய்தேன்.
ஆந்திர எதிர்க்கட்சி தலைவ ரான ஜெகன்மோகன் ரெட்டி, பாஜகவை எதிர்த்து பேச பயப் படுகிறார். ஏனெனில் அவருக்கு சிறைச்சாலை பயம்.
இதேபோன்று, ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாணும் மத்திய அரசை விமர்சிப்பதை கைவிட்டு, தற்போது மாநில அரசை விமர்சித்து வருகிறார்.
தற்போது பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் பல்வேறு மாநில கட்சிகளை இணைத்து ஒரே நேர்க்கோட்டில் கொண்டு வர முயன்று வருகிறேன். இதன் மூலம் நாட்டின் பொருளாதார நிலை மற்றும் ஜனநாயகத்தை காப்பாற்ற முடியும் என நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.