

ஐஸ் பக்கெட் சேலஞ்ச், ரைஸ் (அரிசி) பக்கெட் சேலஞ்ச் என்று ஒருவர் மற்றொருவருக்கு சவால் விடுத்து சமூக வலைதளங்களில் சிலர் வீடியோக்கள் வெளியிட்டனர். அவை வைரலாகி மற்றவர்களும் பின்பற்றினர். அந்த வகையில் தற்போது கேரளாவில், ‘நில்லு நில்லு சேலஞ்ச்’ வீடியோக்கள் வைரலாகி உள்ளன.
மலையாளத்தில், ‘ரெயின் ரெயின் கம் அகெய்ன்’ என்ற திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தில், ‘நில்லு நில்லு என்ட நீலக் குயிலே’ என்ற பாடல் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், இளைஞர்கள் சிலர் தலையில் ஹெல்மெட் அணிந்து கொண்டு, சாலையில் செல்லும் வாகனத்தை திடீரென வழிமறிக்கின்றனர். அந்த வாகனத்தின் முன்பு நில்லு நில்லு பாடல் பாடி நடனமாடுகின்றனர். அதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். குறிப்பாக ‘மியூக் கலி’, ‘டிக் டாக்’ போன்ற சமூக ஊடக ஆப்களில் இதுபோன்ற வீடியோக் கள் அதிகமாக வெளியாகின்றன.
இதில் கவரப்பட்டு இளம்பெண் களும் நில்லு நில்லு சேலஞ்ச்சில் பங்கேற்று வருகின்றனர். இதில் போலீஸ் ஜீப்பையே வழிமறித்து இளைஞர்கள் சிலர் நில்லு நில்லு பாடலுக்கு நடனமாடி உள்ளனர். இந்த வீடியோ சமூக வலை தளங்களில் பிரபலமாகி உள்ளது. இளைஞர்களின் செயல்களால் முக்கிய சாலைகளில் போக்கு வரத்து நெரிசல், பயணிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாகப் புகார்கள் எழுந்தன.
இதையடுத்து, கேரள போலீ ஸார் தங்கள் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதில், ‘‘வாகனங் களை வழிமறிப்பவர்கள் பற்றி ஓட்டுநர்கள் உடனடியாகப் போலீ ஸுக்குத் தகவல் தெரிவிக்கலாம். பயணிகளின் உயிருக்கு அச்சுறுத் தல் ஏற்படுத்துபவர்கள் மீது சட்டப் படி கடும் நடவடிக்கை எடுக்கப் படும்’’ என்று எச்சரித்துள்ளனர்.