

தெலங்கானா மாநில சட்டமன்றத் தேர்தலில் ’சந்திரமுகி’ எனும் 32 வயது திருநங்கை ஒருவர் போட்டியிடுகிறார்.
தெலங்கானா சட்டமன்றத் தேர்தல் வரும் டிசம்பர் 7-ம் தேதி நடைபெறவுள்ளது. தெலங்கானா மாநில தேர்தலில் முதன் முறையாக திருநங்கை ஒருவர் பாஜக- காங்கிரஸ் வேட்பாளர்களை எதிர்த்து வேட்பு மனு தாக்கல் செய்துள் ளார்.
மார்க்ஸிஸ்ட்-பகுஜன் (இடது) கூட்டணி கட்சிகளில், பகுஜன் (இடது) கட்சி சார்பில் சந்திரமுகி (32) எனும் திருநங்கை, ஹைதராபாத்தில் உள்ள கோஷாமஹல் தொகுதிக்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.