சத்தீஸ்கரில் 2-ம் கட்டத் தேர்தல்: விறுவிறுப்பான வாக்குப்பதிவு

சத்தீஸ்கரில் 2-ம் கட்டத் தேர்தல்: விறுவிறுப்பான வாக்குப்பதிவு
Updated on
1 min read

சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவைக்கான 2-ம் கட்டத் தேர்தல் இன்று விறுவிறுப்புடன் நடந்து வருகிறது.

2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்னோட்டமாக 5 மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தல் பார்க்கப்படுகிறது. இதில் முதலாவதாக சத்தீஸ்கர் மாநிலத்தில் நவம்பர் 12-ம் தேதி 18 தொகுதிகளில் முதல்கட்டத் தேர்தல் நடைபெற்றது. நக்சல்கள் ஆதிக்கம் மிகுந்த இந்த பகுதிகளில் அவர்களது மிரட்டல்களையும் மீறி 70 சதவீத அளவுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து, இரண்டாம் கட்டத் தேர்தல் இன்று காலை தொடங்கி நடைபெற்ற வருகிறது. 19 மாவட்டங்களில் உள்ள 72 தொகுதிகளில் இந்த  தேர்தல் நடைபெறுகிறது. காலை முதலே மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.

இந்த தேர்தலில் மொத்தம் 1,101 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நக்சல்கள் நிறைந்த மாவட்டங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் 15 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள பாஜகவுக்கும், காங்கிரஸூக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. எனினும், முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி- மாயாவதி கூட்டணியும் களத்தில் இருக்கிறது.

சத்தீஸ்கரை தொடர்ந்து, மத்தியப் பிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்களில் 28-ம் தேதியும், ராஜஸ்தான், தெலங்கானா மாநிலங்களில் டிசம்பர் 7-ம் தேதியும் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in