

சட்டப்பேரவை தேர்தலை நாளை (டிச.28) சந்திக்கவுள்ள மத்திய பிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்களில் பிரச்சாரம் நேற்று மாலை ஓய்வடைந்தது.
230 உறுப்பினர்களை கொண்ட ம.பி. சட்டப்பேரவைக்கும் 40 உறுப்பினர்களை கொண்ட மிசோரம் சட்டப்பேரவைக்கும் நாளை தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி விரிவான ஏற்பாடு களை தேர்தல் ஆணையம் செய்துள்ளது.
ம.பி.யில் கடந்த 15 ஆண்டு களாக பாஜக ஆட்சியில் உள்ளது. இந்நிலையில் இங்கு ஆளும் பாஜகவுக்கும் முக்கிய எதிர்க்கட்சி யான காங்கிரஸுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இங்குள்ள 230 தொகுதிகளில் கடந்த 2013-ல் நடந்த தேர்தலில் பாஜக 165 தொகுதிகளிலும் காங்கிரஸ் 58 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. பகுஜன் சமாஜ் 4 இடங்களிலும் சுயேச்சைகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றனர்.
மிசோரம் மாநிலத்தில் கடந்த 2008 முதல் காங்கிரஸ் ஆட்சி யில் உள்ளது. வட கிழக்கு மாநிலங்களில் காங்கிரஸ் ஆளும் ஒரே மாநிலமாக மிசோரம் உள்ளது. இங்கு மொத்தமுள்ள 40 தொகுதிகளில் கடந்த தேர்தலில் 34 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. மிசோ தேசிய முன்னணி 5 இடங்களிலும் மிசோ மக்கள் மாநாடு கட்சி ஓரிடத்திலும் வெற்றி பெற்றன.
இம்முறை காங்கிரஸ், மிசோ தேசிய முன்னணி ஆகிய இரு கட்சிகளும் 40 இடங்களிலும் போட்டியிடுகின்றன. பாஜக 39 இடங்களில் போட்டியிடுகிறது.
ம.பி., மிசோரம், ஆகிய மாநிலங்களுக்கான வாக்கு எண் ணிக்கை டிசம்பர் 11-ம் தேதி நடைபெறுகிறது.