சார்க் மாநாட்டில் பங்கேற்க வாய்ப்பில்லை: பாகிஸ்தானுக்கு சுஷ்மா ஸ்வராஜ் பதில்

சார்க் மாநாட்டில் பங்கேற்க வாய்ப்பில்லை: பாகிஸ்தானுக்கு சுஷ்மா ஸ்வராஜ் பதில்
Updated on
1 min read

தெற்காசிய கூட்டமைப்பான சார்க் மாநாடு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. அதன் உறுப்பு நாடு ஒவ்வொன்றிலும் சுற்றுப்படி இந்த மாநாடு நடைபெறும். கடைசியாக 2014–ம் ஆண்டு காத்மாண்டுவில் நடைபெற்ற சார்க் மாநாட்டில் மோடி பங்கேற்றார்.

2016–ம் ஆண்டு பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் மாநாடு நடைபெற இருந்தது. அந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உரியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 19 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனால் மாநாட்டில் பங்கேற்க முடியாது என இந்தியா அறிவித்தது. வங்கதேசம், பூடான், ஆப்கானிஸ்தான் நாடுகளும் மாநாட்டில் பங்கேற்பதில் சிக்கல் எழுந்ததால் சார்க் மாநாடு நிறுத்திவைக்கப்பட்டது.

இந்த ஆண்டு பாகிஸ்தானில் சார்க் மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கலந்துகொள்ளும்படி பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு அனுப்பப்படும் என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் கூறியது.

இந்நிலையில் பாகிஸ்தானில் நடைபெறும் சார்க் மாநாட்டில் இந்தியா கலந்துக்கொள்ளாது என வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அறிவித்துள்ளார். இதுகுறித்து ஹைதராபாத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:

இந்தியாவில் பயங்கரவாத செயல்களை தூண்டிவிடுவதை பாகிஸ்தான் நிறுத்திக்கொள்ளாத வரையில் அந்தநாட்டுடன் அமைதி முயற்சியை மேற்கொள்வதில் அர்த்தமில்லை. பாகிஸ்தானுடன் நல்லுறவை பேண பல முயற்சிகளை மேற்கொண்டோம்.

ஆனால் சரியான முறையில் பாகிஸ்தான் நடந்து கொள்ளவில்லை. பதான்கோட் தாக்குதல், உரி தாக்குதல் என அடுத்தடுத்து பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு கிடையாது. பாகிஸ்தானில் நடைபெறும் சார்க் மாநாட்டில் இந்தியா தரப்பில் பங்கேற்கும் சூழல் இல்லை.

இவ்வாறு சுஷ்மா ஸ்வராஜ் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in