

ஹரியாணா மாநிலம் குருகிராம் மாவட்டத்தில் கண்ட்லி - மனேசர் எக்ஸ்பிரஸ் சாலையை பிரதமர் மோடி நேற்று நாட்டுக்கு அர்ப்பணித் தார். பின்னர், சுல்தான்பூரில் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
கண்ட்லி - மனேசர் எக்ஸ்பிரஸ் சாலை திட்டம், பல்லப்கர் - முஜேசர் மெட்ரோ ரயில் இணைப்புத்திட்டம், விரைவில் அமைய இருக்கும் திறன் பல்கலைக்கழகம் ஆகியவை ஹரியாணாவின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு மேலும் ஒரு படியாக அமைந்துள்ளது. இன்று ஹரியாணா மாநிலத்துக்கு முக்கியமான நாள். சாலை, மெட்ரோ, நீர்வழிப்பாதை இணைப்புகள் மூலம் வேலைவாய்ப்பு கிடைக்கிறது.
காங்கிரஸ் ஆட்சியில் கண்ட்லி - மனேசர் எக்ஸ்பிரஸ் சாலை திட்டம் முடக்கி வைக்கப்பட்டிருந்தது. முந் தைய காங்கிரஸ் ஆட்சியின் போது ஹரியாணாவில் வளர்ச்சித் திட்டங்களுக்கு தடைகள் ஏற்படுத் தப்பட்டு தாமதப்படுத்தப்பட்டன. 2010 காமன்வெல்த் போட்டிகளுக்கு முன் இந்த சாலை திறக்க திட்ட மிடப்பட்டது. ஆனால் நடக்க வில்லை. 8 ஆண்டுகளில் முடிய வேண்டிய இத்திட்டம் 12 ஆண்டு களுக்குப் பின் நிறைவேறி உள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு நான் நடவடிக்கைகள் எடுத்து இத்திட்டம் விரைவாக செயல்படுத்தப்பட்டுள் ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.