சபரிமலை தீர்ப்பு: மீண்டும் விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல்; ஜனவரி 22-ல் விசாரணை- பெண்கள் செல்ல இடைக்கால தடையில்லை

சபரிமலை தீர்ப்பு: மீண்டும் விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல்; ஜனவரி 22-ல் விசாரணை- பெண்கள் செல்ல இடைக்கால தடையில்லை
Updated on
2 min read

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. இந்த வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு ஜனவரி 22-ம் தேதி முதல் மீண்டும் விசாரிக்கும் எனவும் உச்ச நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது. எனினும் பெண்களை அனுமதிக்கும் முந்தைய தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க நீதிபதிகள் மறுத்து விட்டனர்.

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்ல 10 வயது முதல் 50 வயது வரையி லான பெண்களுக்கு அனுமதி இல்லை. இதை எதிர்த்து தொடரப் பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதி மன்றம், அனைத்து வயது பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோயி லுக்குச் செல்லலாம் என்று கடந்த செப்டம்பர் 28-ம் தேதி தீர்ப்பளித்தது.

இதைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் 17-ம் தேதி ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டபோது சில இளம்பெண்கள் கோயிலுக்குச் செல்ல முயன்றனர். இந்து அமைப் பினரின் கடும் எதிர்ப்பு காரணமாக அவர்கள் திருப்பி அனுப்பப்பட்ட னர். கடந்த 22-ம் தேதி கோயில் நடை சாத்தப்பட்டது. ஒரு பெண் கூட ஐயப்பனை தரிசிக்கவில்லை.

இந்தப் பின்னணியில் சபரிமலை தீர்ப்பை எதிர்த்து தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கம், நாயர் சர்வீஸ் சொசைட்டி (என்எஸ்எஸ்) உள் ளிட்ட அமைப்புகள் சார்பில் 48-க்கும் மேற்பட்ட மறுஆய்வு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய் யப்பட்டன. இந்த மனுக்களை கடந்த அக்டோபர் 23-ம் தேதி விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அமர்வு நவம்பர் 13-ம் தேதி விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்தது.

அதன்படி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் ஆர்.எப்.நாரிமன், ஏ.எம்.கான்வில்கர், சந்திரசூட், இந்து மல்கோத்ரா அமர்வு முன்பு மறுஆய்வு மனுக்கள் இன்று பிற்பகல் விசாரணைக்கு வந்தன.

அப்போது, நீதிபதிகள் கூறியதாவது:

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனுக்கள் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இந்த வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு ஜனவரி 22-ம் தேதி முதல் மீண்டும் விசாரிக்கும். இதுபோலவே 3 ரிட் பெட்டிஷன்களும், மறுசீராய்வு மனுக்களுடன் சேர்த்து விசாரிக்கப்படும். எனினும் முந்தைய தீர்ப்பு தற்போது அமலில் உள்ளது. அதற்கு இடைக்கால தடை ஏதும் இல்லை. தற்போதைய நிலைப்படி சபரிமலை கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம்.

இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in