

மக்களவை துணை சபாநாயகராக அதிமுக மூத்த உறுப்பினர் எம்.தம்பிதுரை புதன்கிழமை பதவி ஏற்றார். அனைத்துக் கட்சி சார்பில் ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவருக்கு பிரதமர், சபாநாயகர் உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
மக்களவையில் துணை சபாநாய கர் தேர்தெடுக்கும் தீர்மானத்தை முன்மொழிந்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ‘எம்.தம்பிதுரை துணை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்’ என்றார். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் வழி மொழிந்தார். அதன் பிறகு திரிணமூல் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம், சிவசேனா, தெலுங்கு தேசம், தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி, லோக்ஜன சக்தி, சமாஜ்வாதி, காங்கிரஸ், தேசிய வாத காங்கிரஸ், அதிமுக மற்றும் பாஜ கட்சிகளின் மூத்த உறுப்பினர்களும் முன்மொழிந்து, வழிமொழிந்தனர்.
இதை தொடர்ந்து சபாநாயகர் சுமித்ரா மஹாஜன், மக்களவையின் புதிய துணை சபாநாயகராக அதி முகவின் மூத்த உறுப்பினர் எம்.தம்பி துரை ஒருமனதாக தேர்ந்தெடுக் கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் அவைத்தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர், தனது இருக் கையில் அமர்ந்திருந்த தம்பி துரையை அவை மரபின்படி, கைப் பிடித்து அழைத்துச் சென்று துணை சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர்.
பிரதமர் மோடி பாராட்டு
புதிய துணை சபாநாயகரை பாராட்டி பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் பேசும்போது, ‘‘விவசாய குடும்பத் தில் பிறந்த தம்பிதுரை அரசியல் வாதி மட்டுமல்ல, கல்வியாளரும் ஆவார்.
இவர் போன்ற பன்முகம் கொண்ட ஒருவரை இந்த அவையின் துணை சபாநாயகராக தேர்ந்தெடுத் தமைக்கு உறுப்பினர் கள் அனைவருக்கும், குறிப்பாக எதிர்க்கட்சியினருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கி றேன்’ என்றார்.
மல்லிகார்ஜுன கார்கே பேசும்போது, “பரந்த மனம் கொண்ட துணை சபாநாயகர் தம்பிதுரை, எதிர்கட்சிகள் தம் தரப்பின் வாதங்களை முன்வைக்க போதுமான வாய்ப்பளிப்பார் எனக் கருதுகிறேன்.’ என்றார்.
சபாநாயகர் சுமித்ரா மஹாஜன் பேசும்போது, “’ஐந்து முறை எம்.பி.ஆகவும் மத்திய அமைச்சராகவும் இருந்த உறுப்பினர் தம்பிதுரை, அவையின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் வளர வழி வகுப்பார் என்றும் கருதுகிறேன்’ என்றார்.