Last Updated : 22 Nov, 2018 03:28 PM

 

Published : 22 Nov 2018 03:28 PM
Last Updated : 22 Nov 2018 03:28 PM

கேரள கோயில் அர்ச்சகர் சஸ்பெண்ட்: அமைச்சருக்கு எதிராக ஃபேஸ்புக்கில் அவதூறு

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள ஒரு கோயிலின் அர்ச்சகர் சபரிமலையில் நடந்து வரும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக தேவஸ்தான அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரனை விமர்சித்து ஃபேஸ்புக்கில் எழுதியதால், அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

கஞ்சன்காடு பகுதியில் உள்ள மதியன் கூலம் சேத்திர பாலகா கோயிலின் தலைமை அர்ச்சகர் (மேல்சாந்தி) டி மாதவ நம்பூதிரி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கஞ்சன்காடு சேத்தரி பாலகா கோயில், மலபார் தேவஸ்தான வாரியத்துக்கு கட்டுப்பட்டதாகும்.

பாஜக பொதுச் செயலாளர் கே.சுரேந்திரன் கடந்த 18-ம் தேதி சபரிமலை கோயிலுக்குச் செல்ல முயன்றபோது, போலீஸார் அவரைக் கைது செய்தனர். இதனால், ஆத்திரமடைந்த மேல்சாந்தி மாதவ நம்பூதிரி, தனது ஃபேஸ்புக் பக்கத்தில் மாநில தேவஸ்தான அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரனை கடுமையாக விமர்சனம் செய்து கருத்துகளைப் பதிவிட்டார். இது பெரும் விவாதப்பொருளாக மாறியது.

இதையடுத்து, காசர்கோட்டில் தேவஸ்தான வாரியக் கூட்டம் நடந்தது. அப்போது, அமைச்சரை விமர்சனம் செய்து கருத்துகளைப் பதிவிட்ட மேல்சாந்தி மாதவ நம்பூதிரியை இடைநீக்கம் செய்ய முடிவு எடுக்கப்பட்டது. அதற்கான உத்தரவு கடிதத்தையும் தலைமை அர்ச்சகரிடம் கோயில் நிர்வாக அதிகாரி விஜயன் அளித்தார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், கோயிலின் தலைமை அர்ச்சகர் மாதவ நம்பூதி அந்த உத்தரவு நகலை வாங்க மறுத்து, பாலக சேத்திர கோயிலின் பரம்பரை அர்ச்சகர் எங்களின் குடும்பத்தினர் எங்களை யாரும் நீக்க முடியாது என்று வாதிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x