

அஸ்ஸாம் - டெல்லி ராஜ்தானி ரயிலில் இளம் பெண்ணிடம் ராணுவ வீரர் ஒருவர் அத்துமீறியுள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட இளம் பெண் புகார் தெரிவித்ததின் பேரில் அந்த நபர் குவாஹாட்டி ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக ரயில்வே செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில்; லும்டிங் - சபர்முக் ரயில் நிலையங்கள் இடையே ரயில் பயணித்தபோது அதிகாலை 4 மனியளவில் சம்பவம் நடந்துள்ளது. ஏ.சி. வசதி கொண்ட ரயில் பெட்டியில் அந்த ராணுவ வீரர் பயணித்துள்ளார். அதே பெட்டியில் 17 வயது இளம் பெண் ஒருவர் அவரது உறவினருடன் பயணித்துள்ளார். இளம் பெண்ணிடம், ராணுவ வீரர் அத்துமீறவே அவர் அதிகாரிகளிடன் புகார் செய்துள்ளார். இதனையடுத்து, அந்த நபர் குவாஹாட்டி ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார் என்றார்.
மேலும், கைது செய்யப்பட்ட அந்த ராணுவ வீரர் பெயர் குல்வீந்தர் சிங். அவர், ராணுவ பொறியியல் பிரிவில் பணியாற்றி வருவதாகவும் கூறினார்.