

ஆந்திர மாநிலம் வந்துள்ள பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசினார்.
இரண்டு நாள் பயணமாக ஐதராபாத் வந்துள்ள பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவை, நேற்று மாலை தெலுங்கு தேசக் கட்சித் தலைவரும் ஆந்திர முதல்வருமான சந்திர பாபு நாயுடு சந்தித்து பேசினார்.
தென் மாநிலங்களில், பாரதிய ஜனதா கட்சியை எழுச்சியடை செய்வது குறித்து இந்த சந்திப்பில் அரசியல் ரீதியான பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்படுகிறது.
தெலுங்கு நடிகரும் ஜன சேனா கட்சியின் நிறுவனருமான பவன் கல்யாணும், அமித் ஷாவை சந்தித்து பேசினார். இது தனிப்பட்ட சந்திப்பு என பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும், பிரிக்கப்பட்ட தெலங்கானா மற்றும் ஆந்திராவில், பாஜக- வின் எதிர்காலத்திட்டங்கள் குறித்து இன்று ஆலோசிக்கப்பட உள்ளது. இதனை அடுத்து, இன்று ஆந்திராவில் உள்ள ஊராட்சித் தலைவர்கள் மத்தியில் அமித் ஷா உரையாற்ற உள்ளார்.